பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

‘குலாப்’ புயல் நிவாரண நடவடிக்கைக்கு தயார் நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள், விமானங்கள்

प्रविष्टि तिथि: 26 SEP 2021 12:14PM by PIB Chennai

வங்காள விரிகுடாவில்  உருவாகியுள்ளகுலாப்புயல், அடுத்த 12 மணி நேரத்தில், வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோர பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்திய கடற்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதுகடற்படை கிழக்கு கட்டுப்பாட்டு மைய தலைமையகம், ஒடிசா பகுதிக்கு பொறுப்பு வகிக்கும் கடற்படை அதிகாரிகள், புயல் பாதிப்பை விளைவுகளை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு தேவையான உதவிகளை வழங்க மாநில  நிர்வாகத்தினருடன்  கடற்படை அதிகாரிகள் தொடர்பில் உள்ளனர்.

தயார்நிலை நடவடிக்கையின் ஒரு பகுதியாக, வெள்ள நிவாரண குழுவினர் ஒடிசா மற்றும் விசாகப்பட்டினத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்புயல் பாதிப்பு ஏற்படும்  பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, இரண்டு கடற்படை கப்பல்கள்  தயார் நிலையில் உள்ளனகடற்படை விமானங்களும், விசாகப்பட்டினத்தில் உள்ள ஐஎன்எஸ் தெகா கடற்படை தளம், சென்னை அருகேயுள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை தளம் ஆகியவற்றில் தயார் நிலையில் உள்ளன.

                                                                                                                                                             -----

PRID=1758227


(रिलीज़ आईडी: 1758271) आगंतुक पटल : 232
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Odia