இந்திய போட்டிகள் ஆணையம்
கூட்டு மோசடியில் ஈடுபட்டதற்காக பீர் நிறுவனங்களுக்கு போட்டியியல் ஆணையம் அபராதம் விதித்தது
Posted On:
24 SEP 2021 4:20PM by PIB Chennai
அனைத்திந்திய பிரீவர்ஸ் சங்கத்தின் வாயிலாக பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பீர் விற்பனை மற்றும் விநியோகத்தில் கூட்டு மோசடியில் ஈடுபட்டதற்காக யுனைடெட் பிரீவரிஸ் லிமிடெட், சாப்மில்லர் இந்தியா லிமிடெட் (அன்ஹியுசர் புஷ் இன்பேவ் எஸ் ஏ/என் வியால் வாங்கப்பட்ட பிறகு அன்ஹியுசர் புஷ் இன்பேவ் இந்தியா லிமிடெட் என்று தற்போது பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மற்றும் கார்ல்ஸ்பெர்க் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய மூன்று பீர் நிறுவனங்களுக்கு எதிராக இறுதி உத்தரவை இந்திய போட்டியியல் ஆணையம் பிறப்பித்துள்ளது.
இத்தகைய கூட்டு மோசடியில் ஈடுபடுவதற்காக அனைத்திந்திய பிரீவர்ஸ் சங்கம் தொடங்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், போட்டியியல் சட்டம், 2002-க்கு எதிராக சங்கம் செயல்படுவதாக ஆணையம் தெரிவித்துள்ளது. குறைந்தபட்சம் 2009 முதல் 10.10.2018 வரை (பீர் நிறுவனங்களில் தலைமை இயக்குநர் தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட தேதி) இந்த கூட்டு மோசடி நடைபெற்றுள்ளது.
2012-ல் கார்ல்ஸ்பெர்க் இந்தியா பிரைவேட் லிமிடெட் இணைந்த நிலையில், இத்தகைய செயல்பாடுகளுக்கான வசதியை அளிக்கும் தளமாக 2013-ல் இருந்து அனைத்திந்திய பிரீவர்ஸ் சங்கம் செயல்பட்டது. குறைந்தபட்ச அபராதம் கேட்டு மூன்று பீர் நிறுவனங்களும் ஆணையத்திடம் விண்ணப்பத்திருந்தன.
சட்டவிதிகளின் படி அன்ஹியுசர் புஷ் இன்பேவுக்கு 100 சதவீதம் அபராத விலக்கும், யுனைடெட் பிரீவரிஸ் லிமிடெட்டுக்கு 40 சதவீத விலக்கும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா பிரைவேட் லிமிடெட்டுக்கு 20 சதவீத விலக்கும் அளித்த ஆணையம், யுனைடெட் பிரீவரிஸ் லிமிடெட் சுமார் ரூ 750 கோடியும், கார்ல்ஸ்பெர்க் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ 120 கோடியும் அபராதமாக செலுத்துமாறு உத்தரவிட்டது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757712
*****************
(Release ID: 1757854)
Visitor Counter : 265