சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை செப்டம்பர் 27-28-ல் மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைக்கிறார்
Posted On:
24 SEP 2021 3:57PM by PIB Chennai
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பல்வேறு தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை 2021 செப்டம்பர் 27 அன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி நாட்டுக்கு அர்ப்பணித்து தொடங்கி வைக்கிறார். 2021 செபடம்பர் 28 அன்று இசட்-மோர் மற்றும் சோஜில்லா சுரங்கத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.
கீழ்காணும் சாலை திட்டங்களுக்கு திரு கட்கரி அடிக்கல் நாட்டவுள்ளார்:
அ. பாரமுல்லா-குல்மர்க்: ஜம்மு & காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 701ஏ. ஏற்கனவே உள்ள வாகன தடத்தின் மேம்பாடு. மொத்த நீளம் 45 கி.மீ. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை ரூ 85 கோடி. குல்மார்கிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் பயன் இதன் மூலம் மேம்படும்.
ஆ. வாய்லூ-தோனிபாவா (பி-VI): ஜம்மு & காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை 244. சாலை கட்டுமானம் மற்றும் மேம்பாடு. மொத்த நீளம் 28 கி.மீ. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை ரூ 158 கோடி. கோகர்நாக் மற்றும் வாய்லூவில் போக்குவரத்து வசதிகள் மேம்படும்.
இ. தோனிபாவா முதல் ஆஷாஜிப்ரா வரை (பி-VII): அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 244 உடன் இணையும் தேசிய நெடுஞ்சாலை 44. புறவழி சாலை கட்டுமானம். மொத்த நீளம் 8.5 கி.மீ. ஒப்புதல் அளிக்கப்பட்ட தொகை ரூ 57 கோடி. இதன் மூலம் அனந்த்நாக் வழியாக பயணிப்பதை தவிர்க்கலாம்.
ஈ. ஸ்ரீநகரை சுற்றி நான்கு வழி வட்ட சாலை (42 கி.மீ.). ஸ்ரீநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ 2948.72 கோடியில் அமைக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757699
*****************
(Release ID: 1757804)
Visitor Counter : 275