பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மற்றும் புகழை இருட்டடிப்பு செய்ததாக முந்தைய அரசுகள் மீது மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் குற்றச்சாட்டு

प्रविष्टि तिथि: 24 SEP 2021 1:09PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பு மற்றும் புகழை இருட்டடிப்பு செய்ததாக முந்தைய அரசுகள் மீது மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு); பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று குற்றம் சாட்டினார்.

புதுதில்லி வடக்கு பிளாக்கில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை மற்றும் பங்களிப்பு குறித்த டிஜிட்டல் கண்காட்சியை திறந்து வைத்து பேசிய அவர், அதிகம் அறியப்படாத நமது நாயகர்களுக்கு சேர வேண்டிய புகழை மீட்டெடுத்து என்ன காரணத்தாலோ வரலாற்றால் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரி செய்யும் சமயம் இது என்றார்.

அடுத்த 25 வருடங்களுக்கான சன்கல்ப் சே சித்திபயணம் உலகத்தின் குருவாக இந்தியாவை உறுதியாக நிலைநிறுத்தும் என்றும், எனவே தேசத்தின் பணியில் இளைஞர்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்வதற்கான உறுதிமொழியை எடுப்பதற்கான தேவை ஏற்பட்டுள்ளது என்றும் கூறினார். 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757640

*****************


(रिलीज़ आईडी: 1757765) आगंतुक पटल : 247
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Telugu