இந்திய போட்டிகள் ஆணையம்
ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட்டின் பங்குகளை சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல்
Posted On:
23 SEP 2021 7:01PM by PIB Chennai
இந்திய போட்டியியல் ஆணையகம் (சி்சிஐ), ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட்டின் பங்குகளை சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் வாங்குவதற்கு சிசிஐ ஒப்புதல் அளித்துள்ளது.
போட்டியியல் சட்டம், 2002-ன் 31(1)- பிரிவின் படி இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான ஆணையை சிசிஐ வெளியிட உள்ளது.
போட்டியியல் சட்டம், 2002-இன் 5 (ஏ) பிரிவின் கீழ் ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட்டின் பங்குகளை சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் வாங்குகிறது.
சுமிடோமோ மிட்சுய் பேங்கிங் கார்ப்பரேஷன் மற்றும் இதர நிறுவனங்களின் தாய் நிறுவனமாக சுமிடோமோ மிட்சுய் பினான்சியல் குரூப் இன்க் உள்ளது. பல்வேறு நிதி சேவைகளை இது வழங்குகிறது.
இந்திய ரிசர்வ் வங்கியிடம் பதிவு செய்து கொண்டுள்ள வங்கி சாரா நிதி நிறுவனமாக ஃபுல்லெர்டன் இந்தியா கிரடிட் கம்பெனி லிமிடெட் இயங்கி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1757361
*****************
(Release ID: 1757388)
Visitor Counter : 232