வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
கல்வி நிறுவனங்களுக்கு காப்புரிமை கட்டணங்களில் 80% தளர்வு
Posted On:
23 SEP 2021 12:27PM by PIB Chennai
தற்சார்பு இந்தியாவை நோக்கிய குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, காப்புரிமைகளுக்கான 80% கட்டண தளர்வு, கல்வி நிறுவனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. காப்புரிமை விதிகளில் இது சம்பந்தமான திருத்தங்களை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
அறிவுசார் பொருளாதாரத்தில் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை உணர்ந்து, அண்மைக் காலங்களில் அறிவுசார் சொத்துரிமை சூழலியலை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியா அதிக அளவில் எடுத்து வருகிறது. புதிய கண்டுபிடிப்புகளுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக தொழில்துறை மற்றும் கல்வித் துறையுடன் இணைந்து மத்திய அரசின் தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தகத்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளை வணிக ரீதியாக மாற்றுவதற்கு வழிவகை செய்வதால் இதனை அடைய முடியும்.
விண்ணப்பங்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காக காப்புரிமை விதிகளில் 2016, 2017, 2019 மற்றும் 2020 இல் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. விதிகளில் மாற்றம் ஏற்பட்டிருப்பதன் வாயிலாக, பணிகள் குறைவானதாகவும் பயனாளிகளுக்கு உகந்த வகையிலும் இருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757202
*****************
(Release ID: 1757349)
Visitor Counter : 299