குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் தொழில்துறை அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்: குடியரசு துணைத் தலைவர் வலியுறுத்தல்

Posted On: 23 SEP 2021 12:07PM by PIB Chennai

வரும் காலங்களில் நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கான வழிகளை வகுக்க, பல்வேறு சீர்திருத்தங்களை தீவிரமாக அமல்படுத்துவதில்தொழில்துறை அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.

‘‘ஆன்மிக தெற்கு, உலகளாவிய தொடர்புகள் உச்சிமாநாடு - 2025ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிஎன்ற தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு(சிஐஐ) நடத்திய நிகழ்ச்சியில்  காணொலி காட்சிமூலம் உரையாற்றிய குடியரசு துணைத் தலைவர் திரு.எம். வெங்கையா நாயுடு பேசியதாவது:

 வளர்ச்சியை மீண்டும் பெறுவதில் இந்தியா முக்கியமான கட்டத்தில் உள்ளது. நீடித்த பொருளாதார வளர்ச்சிக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து செயல்பட வேண்டிய நேரம் இது.

பொருளாதாரத்தை மீட்க மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தொழில்துறையும், தனது பங்குக்கு, வளர்ச்சியை நோக்கி தொடர்ந்து செல்வதை உறுதி செய்ய வேண்டும். பொருளாதாரம் அதிகமான வளர்ச்சி பாதைக்கு திரும்ப நடவடிக்கைகள் எடுப்பதும் மற்றும் 2030ம் ஆண்டுக்குள் கோடிக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குவதும் தான் இப்போதைய தேவை.

ஆண்டு உள்நாட்டு மொத்த உற்பத்தியின் வளர்ச்சி வீதம் ஆண்டுக்கு 8 முதல் 8.5 சதவீதம் தொடர்ந்து, தொழில் முனைவு, வேலை வாய்ப்புகள் மற்றும் சமநிலையான முன்னேற்றத்தை தூண்ட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில், பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் 18 நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது

இந்தியா முன்னேறி சென்று தேவையான வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி வளர்ச்சியை அடைய வேண்டும். பெருந்தொற்றை அடுத்து, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன், நகரமயமாக்கல், வருமான உயர்வு, நிலைத்தன்மை, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவை புதிய முக்கியத்துவத்தை பெ

றுகின்றனஇந்தியாவுக்கு இது போன்ற விஷயங்கள் வளர்ச்சியை தூண்டும் மற்

றும் பெருந்தொற்றுக்கு பிந்தைய பொருளாதாரத்தின் அடையாளமாக மாறலாம்

உற்பத்தி, விவசாய ஏற்றுமதி, டிஜிட்டல் சேவைகள், அடுத்த தலைமுறை நிதி திட்டங்கள், அதிக திறன் கொண்ட தளவாடங்கள், சக்தி, பகிர்வு பொருளாதாரம் மற்றும் நவீன சில்லறை விற்பனை ஆகியவற்றில் உலகளாவிய மையங்களை உருவாக்க வேண்டும்

இந்திய பொருளாதாரத்தில், சேவைகள் துறை 54 சதவீத இடத்தை பிடித்துள்ளதுநடைபெறும் தடுப்பூசி திட்டம் மூலம், சேவைகள் துறை மறுமலர்ச்சியை காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு பிராந்தியத்தில் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை 2025ம் ஆண்டுக்குள் அடைவது நிச்சயம் சாத்தியமானதுசீர்திருத்தங்கள், எளிதாக தொழில் செய்வது, முதலீடுகளை ஈர்க்க சிறந்த நடைமுறைகளை பின்பற்றுவது போன்றவற்றில் தென் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.

தென் இந்தியாவில் உற்பத்தியுடன் சேவைகள், நவீன மதிப்புகளுடன் கூடிய கலாச்சாரம் மற்றும் கல்வி, திறன்கள் நிறைந்துள்ளன. எளிதாக தொழில் செய்யும் விஷயத்தில் பல தென் மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தொழில் முனைவு, திறமையான தொழிலாளர்கள், பிரபல கல்வி நிறுவனங்கள், முன்னணி .டி நிறுவனங்கள், நவீன மருத்துவமனைகள் மற்றும் நகரங்கள் இடையே சிறப்பான இணைப்பு ஆகியவை தென் மாநிலங்களின் சாதகமான அம்சங்கள்.

தொழில்களை ஏற்படுத்துவது, முதலீடுகளை கவர்வது போன்றவற்றில் மாநிலங்கள் இடையே நிலவும் ஆரோக்கியமான போட்டி பாராட்டத்தக்கது. விவசாயத்துறையிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். வளர்ச்சியை தக்க வைக்க, விவசாயத்தை நோக்கிய நேர்மறையான நடவடிக்கையை பின்பற்றுவது அவசியம்.

இவ்வாறு திரு. வெங்கையா நாயுடு கூறினார்.

சிஐஐ தலைமை இயக்குனர் திரு சந்திரஜித் பானர்ஜி, சிஐஐ தலைவர் திரு டி.வி நரேந்திரன், சிஐஐ தெற்கு பிராந்திய தலைவர் சி.கே.ரங்கநாதன் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757198

*****

(Release ID: 1757198)


(Release ID: 1757272) Visitor Counter : 306