சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

தொழில் செய்வதற்கு உகந்த இடையூறுகள் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக தனது கொள்கைகளை அரசு மாற்றியமைத்து தொழில் துறைக்கு ஆதரவளிப்பதில் முன்னணியில் உள்ளதாக திரு நிதின் கட்கரி பேச்சு

Posted On: 22 SEP 2021 8:17PM by PIB Chennai

தொழில் செய்வதற்கு உகந்த, இடையூறுகள் இல்லாத சூழலை உருவாக்குவதற்காக தனது கொள்கைகளை அரசு மாற்றியமைத்து தொழில் துறைக்கு ஆதரவளிப்பதில்  முன்னணியில் உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி இன்று கூறினார்.

"சாலைகள் மற்றும் நெடுஞ்சாலைகள் துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக வர்த்தகம் செய்வதை எளிதாக்குதல்" எனும் தலைப்பிலான இணைய கருத்தரங்கில் பேசிய அவர், கொரோனா காரணமாக மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் பொருளாதாரம் ஆகியவற்றில் மிகவும் சவாலான காலகட்டத்தை நாம் கடந்து கொண்டிருக்கிறோம் என்று கூறினார்.

ஆனால் தற்போது உலகெங்கிலும் நேர்மறைத் தன்மை மெதுவாக உருவாகி வருவதாக கூறிய அமைச்சர், கடும் முயற்சியுடனும்

உறுதியுடனும் பல்வேறு முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களை சாலை போக்குவரத்து மற்றும்  நெடுஞ்சாலைகள் அமைச்சகம் செயல்படுத்தி வருவதாக கூறினார்.

அரசின் இந்த முறையான மற்றும் நேர்மறை அணுகலின் காரணமாக அரசு திட்டங்கள் செயல்படுத்தப்படுவதன் வேகம் சமீப காலங்களில் அதிகரித்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1757072

                                                                                             -----



(Release ID: 1757106) Visitor Counter : 208