விவசாயத்துறை அமைச்சகம்

"ஏற்றுமதியாளர்கள் மாநாடு" மற்றும் கண்காட்சியை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம் இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரந்த்லாஜே தொடங்கி வைத்தார்

Posted On: 22 SEP 2021 3:51PM by PIB Chennai

வளர்ந்துவரும் இந்தியாவின் 75 ஆண்டுகள் சுதந்திரம் மற்றும் அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் சாதனைகளின் புகழ்பெற்ற வரலாற்றைக் கொண்டாடும் மற்றும் நினைவுகூரும் இந்திய அரசின் முயற்சியாகவிடுதலையின் அமிர்த் மகோத்சவம்விளங்குகிறது.

காணொலி வர்த்தக கண்காட்சிகள், விவசாயி இணைப்பு தளம், -அலுவலகம், ஹார்டினெட் கண்டறிதல் அமைப்பு, வாங்குவோர் விற்போர் கூட்டங்கள், குறிப்பிட்ட பொருட்களுக்கான பிரச்சாரங்கள் உள்ளிட்ட பல ஏற்றுமதி மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளை அபேடா எடுத்துள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்காக மாநில அரசாங்கத்துடன் அபேடா நெருங்கி பணியாற்றி வருகிறது.

கர்நாடகாவின் பரந்த ஏற்றுமதி திறனைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும், விடுதலையின் அம்ரித் மகோத்சவ கொண்டாட்டங்களின் கீழ் அபேடா ஏற்பாடு செய்து வரும் தொடர் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாகவும், "ஏற்றுமதியாளர்கள் மாநாடு" மற்றும் கண்காட்சியை அபேடா பெங்களூரு பிராந்திய அலுவலகம் 22 செப்டம்பர் 2021 (புதன்கிழமை) லலித் அசோக், பெங்களூருவில் ஏற்பாடு செய்தது.

மாநில அதிகாரிகள், மத்திய அரசு நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், விவசாய உற்பத்தி அமைப்புகள் உள்ளிட்ட சுமார் 200 பங்குதாரர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக பல்வேறு முகமைகள்/ பங்குதாரர்களின் சுமார் 25 அரங்குகள் அமைக்கப்பட்டன.

இந்த மாநாட்டை மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலம் இணை அமைச்சர் திருமிகு ஷோபா கரந்த்லாஜே தொடங்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756985

-----



(Release ID: 1757015) Visitor Counter : 222


Read this release in: English , Urdu , Hindi , Punjabi