பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் சார்பாக விடுதலையின் அம்ருத் மஹோத்ஸவ கொண்டாட்டம்

Posted On: 22 SEP 2021 1:40PM by PIB Chennai

நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தின் பல்வேறு எண்ணெய் நிலையங்களை கேந்திரிய வித்யாலயா பள்ளி மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் நேரில் சென்று பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியாவின் எரிசக்தி சுதந்திரத்தின் முக்கிய அம்சமான எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தில் இந்தியாவின் இளம் தலைமுறையினரிடையே இந்தப் பயணம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. கொவிட்-19 நெறிமுறைகளப் பின்பற்றி இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

விடுதலையின் அம்ருத் மஹோத்சவத்தின் கீழ், செப்டம்பர் 2021 முதல் ஜனவரி 2022 வரை இதுபோன்று தலா 100 மாணவர்கள் அடங்கிய 25 பயணங்களுக்கு ஏற்பாடு செய்ய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம்  திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் 1 முதல் 15-ஆம் தேதி வரை காவேரி, அகமதாபாத், மேசனா, அங்கலேஷ்வர், காம்பே உள்ளிட்ட ஐந்து இடங்களில் இந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களை மாணவர்கள் சுற்றிப் பார்த்தனர். எரிசக்தி வர்த்தகம் மற்றும் அதற்குப் பின்னணியில் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பல்வேறு நுணுக்கங்களை மாணவர்கள் தெரிந்து கொள்ள இது ஒரு வாய்ப்பாக அமைந்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756951

 

-----(Release ID: 1757001) Visitor Counter : 115