பிரதமர் அலுவலகம்
அமெரிக்க பயணத்தை முன்னிட்டு பிரதமரின் அறிக்கை
Posted On:
22 SEP 2021 10:28AM by PIB Chennai
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின் பேரில், 2021 செப்டம்பர் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை நான் அமெரிக்க பயணம் மேற்கொள்கிறேன்.
எனது பயணத்தின்போது, அதிபர் ஜோ பைடனுடன், இந்தியா-அமெரிக்காவின் விரிவான உலகளாவிய யுக்தி கூட்டுறவு குறித்து ஆலோசிப்பேன் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய பரஸ்பர நலன் குறித்த கருத்துக்களையும் பரிமாறிக்கொள்வோம். நமது இரு நாடுகளுக்கும் இடையேயான கூட்டுறவுக்கான வாய்ப்புக்களை , குறிப்பாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆராய, துணை அதிபர் கமலா ஹாரீஸை சந்திப்பதை எதிர்நோக்கியுள்ளேன்.
முதல் முறையாக நேரடியாக நடைபெறும் நான்கு நாடுகளின் (குவாட்) தலைவர்களின் உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிஸன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிதே சுகா ஆகியோருடன் கலந்து கொள்வேன்.
இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த காணொலி உச்சிமாநாட்டின் முடிவுகளை மதிப்பீடு செய்யும் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான நமது பகிரப்பட்ட தொலைநோக்கு அடிப்படையில் எதிர்கால நடவடிக்கைகளுக்கான முன்னுரிமைகளை அடையாளம் காணும் வாய்ப்பை குவாட் உச்சி மாநாடு வழங்குகிறது.
ஆஸ்திரேலிய பிரதமர் மாரிஸன் மற்றும் ஜப்பான் பிரதமர் சுகா ஆகியோரையும் சந்தித்து, அந்தந்த நாடுகளுடன் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிப்பேன் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் பற்றி நமது பயனுள்ள பரிமாற்றங்களை தொடர்வேன்.
ஐ.நா பொது சபையில் ஆற்றும் உரையுடன் எனது பயணத்தை நிறைவு செய்வேன். இதில் கொவிட்-19 பெருந்தொற்று உட்பட அழுத்தம் கொடுக்கும் உலகளாவிய சவால்கள், தீவிரவாதத்தை எதிர்த்து போராடவேண்டிய தேவை, பருவநிலை மாற்றம் மற்றும் இதர முக்கிய விஷயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
எனது அமெரிக்க பயணம், அமெரிக்காவுடன் விரிவான உலகளாவிய யக்தி கூட்டுறவு, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடனான ஒருங்கிணைந்த உறவுகளை வலுப்படுத்தும் நிகழ்வாக இருக்கும் மற்றும் முக்கிய உலகளாவிய விஷயங்களில் நமது கூட்டுறவை முன்னோக்கி எடுத்துச் செல்லும் என்று பிரதமர் கூறியுள்ளார்.
------
(Release ID: 1756986)
Visitor Counter : 406
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam