அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஜம்மு-காஷ்மீருக்கான ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைவோர் திட்டத்தை மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங் முன்மொழிந்தார்
Posted On:
21 SEP 2021 5:15PM by PIB Chennai
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு. பர்ஷோத்தம் ருபாலாவை இன்று சந்தித்த மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனிப்பொறுப்பு); மற்றும் பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறைகளுக்கான இணை அமைச்சருமான டாக்டர். ஜிதேந்திர சிங், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஜம்மு-காஷ்மீருக்கான ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைவோர் திட்டத்தை முன்மொழிந்தார்.
ஜம்மு - காஷ்மீரில் கால்நடைகளும், பால்வளமும் ஏராளமாக இருப்பதை திரு.ரூபலாவிடம் தெரிவித்த டாக்டர்.ஜிதேந்திர சிங், மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் சிஎஸ்ஐஆர் மூலம் ஏற்கனவே தொடங்கப்பட்ட அரோமா இயக்கத்துடன் இவற்றைத் திறம்பட ஒருங்கிணைக்க முடியும் என்று பரிந்துரைத்தார். . ஒருங்கிணைந்த நறுமணப் பால் தொழில்முனைதலுக்கு இது வழிவகுத்து, நிலையான வளர்ச்சி, அதிக வருமானம் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கான புதிய வழிகளை உறுதி செய்யும் என்று அவர் கூறினார்.
“லாவெண்டர் அல்லது நீலப் புரட்சி” என்று பிரபலமாக அழைக்கப்படும் அரோமா இயக்கம் ஜம்மு - காஷ்மீரிலிருந்து தொடங்கி, லாவெண்டர் விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றியமைத்து, அவர்களுக்கு லாபமளித்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தியது என்று டாக்டர். ஜிதேந்திர சிங் கூறினார்.
ஐரோப்பாவைச் சேர்ந்த பயிரை ஜம்மு - காஷ்மீரின் டோடா, கிஷ்ட்வார் மற்றும் ரஜோரி மாவட்டங்களில் அறிமுகப்படுத்தியுள்ள சிஎஸ்ஐஆர்-lllஎம்-இன் (CSIR-lllM) முயற்சிகள் பாராட்டுக்குரியவை என்று அவர் கூறினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப சிஎஸ்ஐஆர் மூலம் அரோமா இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் விவசாயிகளுக்குப் பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756729
-----
(Release ID: 1756797)
Visitor Counter : 228