சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மூன்றாவது மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை மத்திய சுகாதார அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார், முன்னணியில் தமிழகம்

Posted On: 20 SEP 2021 7:18PM by PIB Chennai

மக்களுக்கு பாதுகாப்பான உணவை உறுதி செய்வதில் மாநிலங்களை ஊக்குவிக்கும் முயற்சியிலும், உணவு பாதுகாப்பின் ஐந்து அளவுருக்களில் மாநிலங்களின் செயல்பாடுகளை அளவிடும் வகையிலும், உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) 3-வது மாநில உணவு பாதுகாப்பு குறியீட்டை (SFSI) மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா வெளியிட்டார்.

2020-21-ம் ஆண்டின் தரவரிசை அடிப்படையில் ஒன்பது முன்னணி மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம் அமைச்சர் பாராட்டினார். இந்த ஆண்டு, பெரிய மாநிலங்களில், குஜராத் முதலிடத்தில் உள்ளது, அதற்கு அடுத்தபடியாக கேரளா மற்றும் தமிழ்நாடு உள்ளன.

சிறிய மாநிலங்களில், கோவா முதலிடத்திலும், மேகாலயா மற்றும் மணிப்பூருக்கு அதற்கு அடுத்ததாகவும் உள்ளன. யூனியன் பிரதேசங்களில், ஜம்மு & காஷ்மீர், அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் புதுதில்லி முன்னணியில் உள்ளன.

நடமாடும் பரிசோதனை நிலையங்களின் எண்ணிக்கையை 109 ஆக உயர்த்தி நாட்டில் உணவு பாதுகாப்பு சூழலியலை உறுதிப்படுத்தும் வகையில், 19 வாகனங்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய ஸ்ரீ மாண்டவியா, ஒரு ஆரோக்கியத்தின் முக்கிய அங்கமாக  உணவு இருப்பதை சுட்டிக்காட்டினார். "சமச்சீர் ஊட்டச்சத்து ஆரோக்கியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும்," என்று அவர் கூறினார்.

நடமாடும் உணவு பரிசோதனை ஆய்வகங்கள் மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள செயல்பாட்டாளர்களின் செயல்திறனை அதிகரிக்க உதவுவதோடு, தொலைதூரப் பகுதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி, பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செயல்பாடுகளுக்கு பயனுள்ள கருவியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தியாவில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து துறையில் உயர்தர ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக ஈட் ரைட்ஆராய்ச்சி விருதுகள் மற்றும் மானியங்கள் உள்ளிட்ட எஃப் எஸ் எஸ் ஏ ஐ-ன் பல்வேறு புதுமையான முயற்சிகளை திரு மாண்டவியா தொடங்கி வைத்தார். சைவ உணவுகளை எளிதில் அடையாளம் காண்பதற்கான இலச்சினையையும் அவர் வெளியிட்டார். இதன் மூலம் உணவு தேர்வுகளை மேற்கொள்வதில் நுகர்வோருக்கு அதிகாரம் கிடைக்கும்.

மேலும், உள்ளூர் பருவகால உணவு பொருட்கள், உள்நாட்டு தினை மற்றும் தாவர அடிப்படையிலான புரத ஆதாரங்கள் சார்ந்த சமையல் குறிப்புகளைப் பரிந்துரைக்கும் பல்வேறு மின் புத்தகங்களையும் அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756502

*****************(Release ID: 1756532) Visitor Counter : 200


Read this release in: English , Urdu , Hindi , Punjabi