விவசாயத்துறை அமைச்சகம்

ஜி-20 வேளாண் அமைச்சர்கள் கூட்டம்: இந்திய வேளாண்மையின் முன்னேற்றத்தை விவரித்தார் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர்

Posted On: 19 SEP 2021 4:48PM by PIB Chennai

ஜி-20 நாடுகளின் வேளாண் அமைச்சர்களின் 2வது நாள் கூட்டத்தில், இந்திய வேளாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் விளக்கினார்.

ஜி20 வேளாண் அமைச்சர்களின் 2வது நாள் கூட்டம்,  ‘‘பசியில்லா இலக்கை நோக்கி இணைந்து செயல்படுவோம்: வேளாண் அமைச்சகங்கள் அமல்படுத்திய வெற்றிகரமான திட்டங்கள்’’ என்ற தலைப்பில் நடந்தது. இதில் காணொலி காட்சி மூலம் மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசியதாவது:

தினைகள் மற்றும் இதர சத்தான உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள், மீன், பால் பொருட்கள், ஆர்கானிக் உணவு பொருட்கள் போன்ற பாரம்பரிய உணவு பொருட்களை  மக்கள் உணவில் மீண்டும் அறிமுகம் செய்ய இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் இவற்றின் உற்பத்தி நன்றாக உள்ளதுசத்தான உணவு தானியங்களின் முக்கியத்துவத்தை மனதில் வைத்து, 2023ம் ஆண்டை தினைகள் ஆண்டாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் திட்டத்தை .நா ஏற்றுக் கொண்டுள்ளது.

ஊட்டசத்து மற்றும் நிலையான விவசாயத்தை ஊக்குவிக்க தினைகள் ஆண்டு கொண்டாட்டத்துக்கு அனைத்து நாடுகளும் ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

சுதந்திரத்துக்குப்பின் இந்தியாவில் வோளாண் துறை மிகப் பெரிய வெற்றியை அடைந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்திலும், இந்திய வோளாண்துறை பாதிக்கவில்லை. வேளாண் சந்தை சக்தி வாய்ந்ததாக வைத்திருக்க, மத்திய அரசு மேற்கொண்ட பல நடவடிக்கைகள், வோளாண் துறையின் சிறப்பான செயல்பாட்டுக்கு உதவியது.   2020-2021ம் ஆண்டில் உணவு தானியங்களின் உற்பத்தி அதிகரித்ததோடு, ஏற்றுமதியும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தது.

ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, செறிவூட்டப்பட்ட 17 பயிர் வகைகள் உருவாக்கப்பட்டு விவசாயத்துக்கு வழங்கப்பட்டன. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது. இதுவரை, ரூ.1.58 லட்சம் கோடி, 11.37 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

சொட்டு நீர் பாசன திட்டம், ஆர்கானிக் விவசாயத்துக்கான, பரம்பராகத் கிரிஸி விகாஸ் திட்டம் ஆகியவை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டுள்ளனபிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நரேந்திர சிங் தோமர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வேளாண்துறை கூடுதல் செயலாளர் டாக்டர் அபிலாஷ் லிகி, இணை செயலாளர்கள் திருமிகு அலக்நந்தா தயாள் மற்றும் டாக்டர் பி.ராஜேந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1756265

------



(Release ID: 1756283) Visitor Counter : 194