பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியா-நேபாளம் ராணுவம் இடையே 15வது சூரியகிரண் கூட்டுப் பயிற்சி: செப்டம்பர் 20 முதல் நடைப்பெறுகிறது
Posted On:
17 SEP 2021 5:26PM by PIB Chennai
இந்தியா-நேபாளம் இடையே 15வது கூட்டு ராணுவ பயிற்சி உத்தரகாண்ட் பிதோராகரில் செப்டம்பர் 20ம் தேதி தொடங்குகிறது. இந்த பயிற்சியில் இந்திய ராணுவத்தின் காலாட்படை மற்றும் நேபாள ராணுவத்தினர் , தங்கள் நாட்டில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையின் போது மேற்கொண்ட நடவடிக்கைகளை பகிர்ந்து கொள்கின்றனர்.
இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, இருநாட்டு ராணுவத்தினரும் மலைப் பகுதிகளில் தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் பயன்படுத்திய தங்கள் ஆயுதங்கள், யுக்திகள் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்கின்றனர். மனிதாபிமான உதவி, மலைப்பகுதி போர்முறை, வனப்பகுதி போர்முறை போன்ற தலைப்புகளில் நிபுணர்களின் ஆலோசனையும் இந்த பயிற்சியில் இடம்பெறுகிறது.
இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவதில் இந்த கூட்டுப்பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இதற்கு முன் சூரிய கிரண் கூட்டு பயிற்சி கடந்த 2019ம் ஆண்டு நேபாளில் நடந்தது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755783
*****************
(Release ID: 1755930)
Visitor Counter : 285