தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

நியூஸ் ஆன் ஏர் செயலியில் ரேடியோ நேரடி நிகழ்ச்சியின் உலகளாவிய தரவரிசை: கொரியாவில் எப்.எம் ரெயின்போ மற்றும் எப்.எம் கோல்டு பிரபலம்

Posted On: 17 SEP 2021 3:31PM by PIB Chennai

இந்தியா தவிர உலகளாவிய தரவரிசை பட்டியலில் முக்கிய மாற்றமாக எப்.எம் ரெயின்போ மும்பை, ரெயின்போ கன்னடா காமன்பிலு மற்றும் அஸ்மிதா மும்பை ஆகியவை முதல் 10 இடங்களில் வந்துள்ளன. இதனால் ஏஐஆர் நியூஸ் 24*7, ஏஐஆர் திரிச்சூர் மற்றும் ஏஐஆர் கொச்சி எப்.எம் ரெயின்போ ஆகிய சேனல்கள் பின்னுக்கு சென்றுள்ளன.

உலக நாடுகள் வரிசையில் முதல் 10 இடத்துக்குள் சவுதி அரேபியா நுழைந்துள்ளது.

அகில இந்திய வானொலி நிகழ்ச்சியில் மராத்தி சேவையான ஏஐஆர் அஸ்மிதா மும்பை, ஐரோப்பிய நாடுகளில் பிரபலம் அடைந்துள்ளது. எப்எம் ரெயின்போ தில்லி, எப்.எம். கோல்டு தில்லி ஆகியவற்றுக்கு கொரியாவில் குறிப்பிடத்தக்க அளவில் நேயர்கள் உள்ளனர்.

பிரச்சார் பாரதியின் அதிகாரப்பூர்வ செயலியான நியூஸ் ஆன் ஏர்-ல் 240-க்கும் மேற்பட்ட ரேடியோ சேவைகள் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755728

*****************



(Release ID: 1755888) Visitor Counter : 184