வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
ஏசிக்கள் மற்றும் எல் ஈ டி விளக்குகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்காக 52 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன
Posted On:
16 SEP 2021 5:01PM by PIB Chennai
ஏசிக்கள் மற்றும் எல் ஈ டி விளக்குகள் போன்ற வீட்டு உபயோக பொருட்களின் உள்ளூர் தயாரிப்பை ஊக்குவிப்பதற்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் ரூ 5,866 கோடி முதலீட்டு உறுதியுடன் மொத்தம் 52 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. 2021 ஏப்ரல் 16 அன்று அறிவிக்கப்பட்ட இத்திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 2021 செப்டம்பர் 15 ஆகும்.
டாய்கின், ஹிட்டாச்சி, மெட்டியூப், நிடெக், வோல்டாஸ், புளூஸ்டார், ஹாவெல்ஸ், ஆம்பர், ஈபேக், டிவிஸ்-லூகாஸ், டிக்சன், ஆர் கே லைட்டிங், யுனிகுளோபஸ், ராதிகா ஆப்டோ, சிஸ்கா உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் ஏசிக்கள் மற்றும் எல் ஈ டி விளக்குகளுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்காக விண்ணப்பித்துள்ளன
இத்திட்டத்தின் வாயிலாக அடுத்த ஐந்து வருடங்களில் ரூ 2,71,000 கோடி மதிப்பிலான ஏசி மற்றும் எல் ஈ டி விளக்குகள் சார்ந்த பொருட்கள் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரூ 5,866 கோடி மதிப்பிலான கூடுதல் முதலீடு இந்த திட்டத்தின் கீழ் இத்துறையில் செய்யப்படும். ஏசி உதிரிபாகங்களுக்காக 31 நிறுவனங்கள் ரூ 4995 கோடி முதலீட்டிற்கும், எல் ஈ டி பொருட்களுக்காக 21 நிறுவனங்கள் ரூ 871 கோடி முதலீட்டிற்கும் உறுதியளித்துள்ளன.
இத்திட்டத்தின் மூலம் அடுத்த 5 வருடங்களில் சுமார் 2 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும். 15 முதல் 20 சதவீதமாக தற்போது இருக்கும் உள்நாட்டு மதிப்பு கூட்டல் விகிதம் 75 முதல் 80 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755458
-----
(Release ID: 1755560)
Visitor Counter : 269