சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
27-வது சர்வதேச ஒசோன் தினத்தை இந்தியா அனுசரிப்பு
Posted On:
16 SEP 2021 2:31PM by PIB Chennai
ஓசோன் படலத்தை பாதிக்கும் பொருட்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை இந்தியா வெற்றிகரமாக படிப்படியாக நிறுத்தியுள்ளது என்று சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் இணை அமைச்சர் திரு அஷ்வினி குமார் சௌபே இன்று கூறினார்.
மாண்ட்ரியல் செயல்திட்டத்தின் அனைத்து அம்சங்களையும் இது வரை இந்தியா நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் கூறினார். 27-வது சர்வதேச ஒசோன் தினத்தை அனுசரிப்பதற்கான கூட்டம் ஒன்றில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதலில் ஈடுபட்டுள்ள முக்கிய பங்குதாரர்கள் சிறப்பாக செயலாற்றியதே இந்தியாவின் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார். தொழிற்சாலைகள், ஆராய்ச்சி நிறுவனங்கள், அமைச்சகங்கள் மற்றும் நுகர்வோர் இந்த முயற்சியில் குறிப்பிடத்தகுந்த பங்காற்றினர்.
இந்தியா குளிர்வித்தல் செயல்திட்டத்தின் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கான செயல் திட்டத்தை இணை அமைச்சர் வெளியிட்டார். பரிந்துரைகளை கவனமாக பரிசீலித்தும், தொடர்புடைய துறைகள் மற்றும் அமைச்சகங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுடனான விரிவான ஆலோசனைகளுக்கு பிறகும் இந்த செயல்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755402
----
(Release ID: 1755530)