ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஜம்மு காஷ்மீரின் யுனானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இளங்கலை பாடப்பிரிவை செப்டம்பர் 17 அன்று துவங்கி வைக்கிறார் மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால்

प्रविष्टि तिथि: 16 SEP 2021 11:11AM by PIB Chennai

மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால், செப்டம்பர் 17-ஆம் தேதி, ஜம்மு காஷ்மீரில் உள்ள யுனானி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இளங்கலை பாடப்பிரிவை தொடங்கி வைப்பார். துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

இந்த மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை உருவாக்குவதற்குத் தேவையான ரூ. 32.50 கோடியில் மத்திய அரசின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 17.00 கோடியை ஆயுஷ் அமைச்சகம் வழங்கியுள்ளது.  136 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 3 லட்சம் பேருக்கு இந்த கல்லூரியின் மருத்துவமனையில் சேவை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அருகிலுள்ள ஸ்ரீநகர், பாரமுல்லா மற்றும் பந்திப்போரா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் இதன் மூலம் பயனடைவார்கள்.

இந்தக் கல்லூரி யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான இளங்கலை பாடப்பிரிவில் ஆண்டுதோறும் 60 மாணவர்களை சேர்க்கும் திறனை பெற்றுள்ளது. அதேபோல், 60 படுக்கை வசதிகள் கொண்ட  மருத்துவமனை வசதியும் இந்த கல்லூரியில் உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755355


(रिलीज़ आईडी: 1755391) आगंतुक पटल : 307
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Punjabi , Kannada