பாதுகாப்பு அமைச்சகம்
18வது இந்தியா-அமெரிக்கா பொருளாதார உச்சி மாநாடு: காணொலியில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் உரையாற்றினார்
Posted On:
15 SEP 2021 6:02PM by PIB Chennai
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும் எனவும், பிரதமர் திரு நரேந்திர மோடியின் ‘இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம்’ என்ற தொலை நோக்கை நனவாக்க வேண்டும் எனவும் பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
18வது இந்திய-அமெரிக்க பொருளாதார உச்சிமாநாட்டை, இந்திய-அமெரிக்க வர்த்தக சபை, காணொலி காட்சி மூலம் இன்று நடத்தியது. 'மீண்டும் திரும்புதல் -கொரோனாவுக்கு பிந்தைய மீளக்கூடிய மீட்புப் பாதை' என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடந்தது. இதில் மத்திய அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பேசியதாவது:
பாதுகாப்புத்துறை, பாதுகாப்புக்கு மட்டும் அல்லாமல், நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள், இந்தியாவை முதலீட்டுக்கான வலுவான நம்பகமான இடமாக மாற்றியுள்ளது. பாதுகாப்புத் துறையில் நாட்டின் உண்மையான திறனை உணர, தொழில் துறை தலைவர்கள், கூட்டு முயற்சி மூலம் தொழில்நுட்பத்தை பகிர்ந்து கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.
கூட்டு உற்பத்தி, கூட்டு வளர்ச்சிக்கு, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் பாதுகாப்பு தளவாட தொழில்துறையினருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. அமெரிக்க நிறுவனங்களுக்கு தேவையான, உதிரி பாகங்களை இந்திய நிறுவனங்களால் வழங்க முடியும்.
கொரோனா சூழல் ஏற்பட்ட போதிலும், மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளால், நாட்டின் பொருளாதாரம் மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 2 ஆண்டுகளில் ஆங்கில எழுத்தான ‘v’ வடிவ வளர்ச்சியை காட்டுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1755155
-----
(Release ID: 1755240)
Visitor Counter : 244