பாதுகாப்பு அமைச்சகம்
இரண்டு நாள் மும்பை பயணத்தை நிறைவு செய்தார் ராணுவத் தளபதி
प्रविष्टि तिथि:
14 SEP 2021 5:47PM by PIB Chennai
ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே, தனது இரண்டு நாள் மும்பைப் பயணத்தை நிறைவு செய்தார். மும்பையில் உள்ள தரைப்படை மற்றும் கடற்படை மையங்களை அவர் பார்வையிட்டார். மும்பையில் உள்ள மேற்குக் கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைமையகத்துக்கு ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம். நரவானே நேற்று சென்றார். அங்கு அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேற்குக் கடற்படைக் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவர் வைஸ் அட்மிரல் ஆர். ஹரிகுமாரை அவர் சந்தித்துப் பேசினார். சீக்கியக் காலாட்படை இணைந்துள்ள போர்க்கப்பல் ஐஎன்எஸ் தெக்-ஐயும் ராணுவத்தளபதி பார்வையிட்டார். அன்று மாலை, மகாராஷ்டிர ஆளுநர் திரு. பகத்சிங் கோஷயாரியை சந்தித்து மகாராஷ்டிராவில் உள்ள முன்னாள் ராணுவத்தினர் நலன் குறித்துப் பேசினார். அதன் பின்பு, பாதுகாப்புப் படைகளுக்கு நவீன ஆயுதங்களை விநியோகிக்கும் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
மகாராஷ்டிரா, குஜராத், மற்றும் கோவாவில் உள்ள ராணுவப் பிரிவுகளின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இங்கு இன்று சென்ற ராணுவத் தளபதியிடம், தலைமையகத்தின் செயல்பாடுகள் குறித்து அதன் தலைமை அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் எஸ்.கே. பிரஷார் விளக்கினார். கொவிட் தொற்று நேரத்தில் செய்த மனிதாபிமான உதவிகள், இந்த் ஆண்டு நடைபெற்ற வெள்ள மீட்புப் பணிகள் ஆகியவை குறித்து ராணுவத் தளபதிக்கு விளக்கப்பட்டது. ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நலத்திட்டங்கள், நடவடிக்கைககைளை ராணுவத் தளபதி பாராட்டினார்.
-----
(रिलीज़ आईडी: 1754877)
आगंतुक पटल : 243