உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் தொழில்கள் அமைச்சகத்தால் உணவு பதப்படுத்தல் வாரம் நடத்தப்பட்டது

Posted On: 11 SEP 2021 7:32PM by PIB Chennai

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆவதை குறிக்கும் விதமாக, விடுதலையின் அம்ரித்  மகோத்சவத்தை இந்திய அரசு கொண்டாடி வருகிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2021 செப்டம்பர் 6 முதல் 2021 செப்டம்பர் 12 வரை உணவு பதப்படுத்தல் வாரத்தை கொண்டாடி வரும் மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம், இதன் கீழ் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

வாரம் முழுவதும் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசத்தில் உள்ள பிரதமரின் குறு உணவு பதப்படுத்தல் நிறுவனங்களின் முறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் 135 சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக மாவட்ட திட்ட மேலாண்மை பிரிவுக்கு விதை மூலதன தொகையாக ரூபாய் 43.20 லட்சம் வழங்கப்பட்டது.

 பால் பதப்படுத்தல் மற்றும் மதிப்பு கூட்டல் தொடர்பான தேசிய கருத்தரங்கு ஒன்றும் 'ஒரு மாவட்டம் ஒரு பொருள்' திட்டத்தின் கீழ் உணவு பதப்படுத்தல் அமைச்சகம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் பிரதமரின் குறு உணவு பதப்படுத்தல் நிறுவனங்களை முறைப்படுத்தல் திட்டத்தின் கீழ் கஜானனன் அக்ரோ இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் திரு கௌரவ் அசோக் மேத்தாரின் வெற்றிக்கதை, அமைச்சகத்தின் சமூக ஊடக தளங்களில் தற்சார்பு தொழில்கள் வரிசையில் பதிவிடப்பட்டது.

உணவு பதப்படுத்தல் வாரத்தின் கீழ், உணவை வீணாக்குதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் காணொலி ஒன்று

 உணவு பதப்படுத்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1754173

*****************



(Release ID: 1754194) Visitor Counter : 190