அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
தேன்கூடுகள் தொழில்நுட்பம் போல், ஒலி கட்டுப்பாட்டு தாள் உருவாக்கம் Noise Control Sheet Absorber developed
Posted On:
10 SEP 2021 2:34PM by PIB Chennai
தேன்கூடு தொழில்நுட்பத்தில் ஒலி கட்டுப்பாட்டு காகித தேன் கூடு மற்றும் வலுவான பாலிமர் தேன் கூடு அமைப்பை இந்திய ஆராய்ச்சியாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார்.
இந்த தேன்கூடு அமைப்பு, ஒலி-உறிஞ்சும் பேனல்களாக செயல்பட்டு, ஒலி அதிர்வெண்ணை குறைந்த அதிர்வெண் வரம்புகளுக்கு சிதறடிக்கும். ஒலியியலை உருவாக்குவதிலும், சுற்றுச்சூழல் இரைச்சல் கட்டுப்பாடு தீர்வாகவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம்.
அதிக அதிர்வெண்களைக் கட்டுப்படுத்துவதில், பல பாரம்பரிய பொருட்கள் சிறந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும், இயற்கையான தேன் கூடுகள், அவற்றின் வடிவியல் காரணமாக உயர் மற்றும் குறைந்த அதிர்வெண்களை திறம்பட கட்டுப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நடத்தை, ஒலியியல் ஆற்றலை அதிர்வு ஆற்றலாக மாற்றுவதன் காரணமாக, கோட்பாடு பகுப்பாய்வு மற்றும் பரிசோதனைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அதிர்வு ஆற்றல், சுவர் தணித்தல் அம்சம் காரணமாக வெப்ப வடிவில் சிதறடிக்கப்படுகிறது.
இந்த அம்சத்தை பொறியியல் தீர்வாகப் பிரதிபலிப்பது, ஒலி மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான, செலவு குறைந்த முறையை வழங்கலாம்.
ஐஐடி ஹைதராபாத்தில் உள்ள மெக்கானிக்கல் மற்றும் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறை டாக்டர் பி. வெங்கடேசம் மற்றும் டாக்டர் சூர்யா, ஆகியோர் பயோமிமெடிக் டிசைன் முறையைப் பயன்படுத்தி இந்த அம்சத்தை பிரதிபலிக்கும் குறைந்த தடிமன் மற்றும் வலுவான ஒலி பேனல்களை உருவாக்கினர்.
இந்த வடிவமைப்பு முறையானது, தேன் கூடு மாதிரி ஒலி ஆற்றல் சிதறலின் இயற்பியலைப் புரிந்துக்கொண்டு அதன் வடிவமைப்பைப் பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு, டாக்டர் பி. வெங்கடேசமை, 9912986892 என்ற போன் எண், venkatesham@mae.iith.ac.in என்ற இ-மெயில் முகவரியில் தொடர்பு கொள்ள முடியும்.
-----
(Release ID: 1753888)
Visitor Counter : 296