சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் நாளை கவுரவிக்கிறார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 SEP 2021 6:18PM by PIB Chennai

டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள், இதர வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் மத்திய சமூக நீதி & அதிகாரமளித்தல் இணை அமைச்சர் திரு ராம்தாஸ் அத்வாலே புதுதில்லியில் உள்ள  ஹோட்டல் அசோகாவில் நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் கவுரவிக்கவுள்ளனர்.

பதக்கம் வென்ற அனைவருக்கும் ரொக்க பரிசு வழங்க அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. தங்கம் வென்றவர்களுக்கு ரூ 10 லட்சமும், வெள்ளி வென்றவர்களுக்கு ரூ 8 லட்சமும், வெண்கலம் வென்றவர்களுக்கு ரூ 5 லட்சமும் வழங்கப்படும்.

2021 ஆகஸ்ட்-செப்டம்பரில் நடைபெற்ற டோக்கியோ 2020 பாராலிம்பிக்கில் ஒன்பது பிரிவுகளில் பங்கேற்க இது வரை இல்லாத அளவில் 54 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களை இந்தியா அனுப்பியது. ஐந்து தங்கம், எட்டு வெள்ளி மற்றும் ஆறு வெண்கல பதக்கங்களை வென்று இந்திய பாராலிம்பிக் வீரர்கள் வரலாறு படைத்தனர். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753570

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1753633) வருகையாளர் எண்ணிக்கை : 278
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi