ரெயில்வே அமைச்சகம்

மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட உபகரணம் அறிமுகம்

Posted On: 09 SEP 2021 4:46PM by PIB Chennai

மும்பை-அகமதாபாத் அதி வேக ரயில் தட திட்டத்தின் கட்டமைப்பை துரிதப்படுத்துவதற்காக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட ஃபுல் ஸ்பேன் லான்ச்சிங் எக்யுப்மென்ட்- ஸ்ட்ராடில் காரியர் மற்றும் கிர்டர் டிரான்ஸ்போர்டரை மத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு & தகவல் தொழில்நுட்பம் அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் காணொலி மூலம் இன்று அறிமுகம் செய்தார்.

திரு மியாமோட்டொ ஷிங்கோ, மாண்புமிகு அமைச்சர், ஜப்பான் தூதரகம், திரு சுனீத் சர்மா, தலைவர் & தலைமை செயல் அதிகாரி, ரயில்வே வாரியம், திரு சதிஷ் அக்னிஹோத்ரி, நிர்வாக இயக்குநர், என் எச் எஸ் ஆர் சி எல், திரு அனுபம் குமார், திரு எஸ் என் சுப்பிரமணியன், தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர், எல் & டி கன்ஸ்ட்ரக்‌ஷன் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மாண்புமிகு அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ், தற்சார்பு இந்தியா இயக்கத்தை ஊக்கப்படுத்தும் விதமாக 1100 மெட்ரிக் டன் திறன் கொண்ட இந்த உபகரணத்தை சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் லார்சன் & டூப்ரோ நிறுவனம் வடிவமைத்து தயாரித்ததாக கூறினார். இதற்காக 55 சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுடன் எல்&டி கூட்டு சேர்ந்தது.

 

இத்தகைய உபகரணத்தை வடிவமைத்து தயாரிக்கும் இத்தாலி, நார்வே, கொரியா மற்றும் சீனாவின் பட்டியலில் இந்தியாவும் தற்போது இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் அதி வேக ரயில்வே கட்டமைப்பை விரைந்து நிறுவ முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753529

*****************

 



(Release ID: 1753630) Visitor Counter : 225


Read this release in: English , Urdu , Hindi , Punjabi