உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள்/தலைமை ஆபத்து தடுப்பு அதிகாரிகள்/இடைநிலை அலுவலர்களின் தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் திரு அஜய் குமார் மிஷ்ரா தொடங்கி வைத்தார்

Posted On: 09 SEP 2021 5:47PM by PIB Chennai

தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகள்/தலைமை ஆபத்து தடுப்பு அதிகாரிகள்/இடைநிலை அலுவலர்களின் தேசிய மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் திரு அஜய் குமார் மிஷ்ரா புதுதில்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் திறன் வளர்த்தலுக்காக தேசிய சைபர் குற்ற ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் மையம் மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் நவீனப்படுத்தல் பிரிவு ஆற்றிவரும் துடிப்பான பங்களிப்பை தமது துவக்கவுரையில் திரு அஜய் குமார் மிஷ்ரா பாராட்டினார்.

நாட்டில் சைபர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மத்திய உள்துறை அமைச்சகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சகத்தால் 2018-ம் ஆண்டு நிறுவப்பட்ட இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம், சைபர் குற்றங்கள் மற்றும் சைபர் பாதுகாப்பு சவால்களை எதிர்த்து போராடுவதற்கான சிறப்பு நோக்க அலகாகும்.

2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சைபர் குற்ற தகவலளிப்பு தளம் இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும். மக்கள் சார்ந்த குற்ற தகவலளிப்பு தளம் இதுவாகும்.

இந்திய சைபர் குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையத்தால் தொடங்கப்பட்ட 155260 உதவி எண் நிதி மோசடிகள் குறித்த புகார்களை பதிவு செய்ய சாதாரண மக்களுக்கு உதவுகிறது. உள்துறை அமைச்சகம் மற்றும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753555

*****************


(Release ID: 1753614)
Read this release in: English , Urdu , Hindi , Bengali