சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
இந்தியாவின் பருவநிலை மாற்ற உத்திகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தியின் பயன்பாடு ஆகியவை முக்கிய தூண்களாக விளங்குகின்றன: மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ்
Posted On:
08 SEP 2021 6:14PM by PIB Chennai
மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் திரு புபேந்தர் யாதவ், ஐக்கிய அரபு அமீரகத்தின் பருவநிலை தூதரும் தொழில்துறை மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்கான அமைச்சருமான மேதகு டாக்டர் சுல்தான் அல் ஜபீர் உடன் காணொலி வாயிலாக இன்று உரையாடினார். ஐக்கிய நாடுகள் சபையின் 26-வது பருவநிலை மாற்ற உறுப்பினர்கள் மாநாடு (காப்26), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அவற்றுடன் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இந்தியாவின் பருவநிலை மாற்ற உத்திகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எரிசக்தியின் பயன்பாடு ஆகியவை முக்கிய தூண்களாக விளங்குவதாக குறிப்பிட்ட திரு யாதவ், பிரதமர் திரு நரேந்திர மோடியின் சீரிய தலைமையின் கீழ் புதுப்பிக்க எரிசக்தி குறிப்பாக சூரிய ஒளி சக்தியை குறைந்த கட்டணத்திற்கு வழங்க இந்தியா முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இந்தியாவின் ஹைட்ரஜன் எரிசக்தி இயக்கம், சர்வதேச சூரிய ஒளி கூட்டணி, பேரிடர் நெகிழ்வுத்தன்மை உள்கட்டமைப்பு கூட்டணி உள்ளிட்ட சர்வதேச முன்முயற்சிகள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.
இந்த ஆண்டு கிளாஸ்கோவில் நடைபெற உள்ள காப்26 மாநாட்டின்போது அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய அரபு அமீரகம் அறிமுகப்படுத்தவுள்ள பருவநிலைக்கான வேளாண் புதுமை இயக்கத்திற்கு இந்தியாவின் ஆதரவை டாக்டர் சுல்தான் அல் ஜபீர் கோரினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1753252
(Release ID: 1753365)
Visitor Counter : 229