பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம்
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டில் - இந்திய தூதரகங்களில் தன்னம்பிக்கை இந்தியா மையங்களை அமைக்கிறது டிரைஃபெட்
Posted On:
07 SEP 2021 12:51PM by PIB Chennai
சுதந்திர இந்தியாவின் 75-வது ஆண்டில், இந்திய தூதரகங்களில், ‘ஆத்ம நிர்பார் பாரத்’ என்ற தன்னம்பிக்கை இந்தியா மையங்களை டிரைஃபெட் (பழங்குடியினர் கூட்டுறவு சந்தை மேம்பாட்டு கூட்டமைப்பு) அமைக்கிறது.
மத்திய அரசின் பலதுறை அமைச்சகங்களுடன், டிரைஃபெட் இணைந்து செயல்படுகிறது. வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து அடுத்த 90 நாட்களில், வெளிநாடுகளில் உள்ள 75 இந்திய தூதரங்களில், தற்சார்பு இந்தியா மையங்களை டிரைஃபெட் அமைக்கிறது.
முதல் மையம் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள இந்திய தூதரகத்தில் தொடங்கப்பட்டது. இதில் புவிசார் குறியீட்டுடன் கூடிய பழங்குடியினர் சேகரிப்பு மற்றும் தயாரிப்பு பொருட்கள் விற்பனை செய்யப்படும். இந்த பொருட்களை 75 நாடுகளின் தூதரகங்களுக்கு அனுப்பும் பணியை டிரைஃபெட் மேற்கொண்டு வருகிறது.
சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நியூயார்க் சதுக்கத்தில் பழங்குடியினர் தயாரிப்பு பொருட்கள் மற்றும் ஆயுர்வேத பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. இதற்காக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் ரூ.8.5 லட்சம் மதிப்பிலான பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களுக்கு ஆர்டர் கொடுத்திருந்தது.
இந்த ஊக்குவிப்பு விற்பனை மூலம், பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களுக்கு மிகப் பெரிய சந்தை கிடைக்கும். உள்ளூர் தயாரிப்பு பொருட்களை வாங்குவோம், பழங்குடியினர் தயாரிப்பு பொருட்களை வாங்குவோம் என்ற தொலைநோக்கை அடைய முடியும். இது நாட்டில் உள்ள பழங்குடியினருக்கு நிலையான வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் அளிக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752773
----
(Release ID: 1752906)