பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து திட்டம் குறித்து மும்பையின் சிறுபான்மை சமுதாயத்திடம் அரசு விழிப்புணர்வு
Posted On:
06 SEP 2021 5:29PM by PIB Chennai
மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள, சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே ஊட்டச்சத்து மாதத்தின் கீழ் நடைபெற ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகளில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி மற்றும் மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் மற்றும் மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிகளில் இஸ்லாமிய, புத்த, சமண, சீக்கிய, கிறிஸ்தவ மற்றும் பார்சி சமுதாயங்களை சேர்ந்தவர்களோடு மத்திய அமைச்சர்கள் உரையாடினர்.
இஸ்லாமிய சமுதாயத்தினரோடு அஞ்சுமன்-ஐ-இஸ்லாம் பெண்கள் பள்ளி, பாந்த்ரா; சமண, சீக்கிய மற்றும் புத்த மதத்தினருடன் மகாத்மா காந்தி சேவா மந்திர் கூடம், பாந்த்ரா; கிறிஸ்தவ மக்களுடன் அவர் லேடி குட் கவுன்சில் உயர்நிலை பள்ளி, சியோன்; மற்றும் பார்சி சமுதாயத்தினருடன் பர்சோர் ஃபௌண்டேஷன், தி தாதர் அதோர்னன் இன்ஸ்டியூட், தாதர், ஆகிய இடங்களில் அமைச்சர்கள் உரையாடினர்.
சிறுபான்மையினரிடையே பேசிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி, பெண்களின் பிரச்சினைகளை சமுதாயத்தின் பிரச்சினையாக பிரதமர் திரு நரேந்திர மோடி மாற்றியுள்ளதாக தெரிவித்தார். “மகப்பேறு உடல்நலம் குறித்த விவாதங்கள் தற்போது பெண்கள் மத்தியில் மட்டும் நடைபெறவில்லை. ஆண்களும் தற்போது பெண்களின் ஆரோக்கியத்தை பற்றி நினைக்கிறார்கள். பெண்களின் உடல்நலம் ஒட்டுமொத்த குடும்பத்தின் கூட்டு பொறுப்பாகும்,”என்று அவர் கூறினார்.
மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி பேசுகையில், நிறைவேற்றப்படக்கூடிய முடிவுகள் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் உறுதியாக விளங்குவதாக கூறினார். “குறைந்த விலையில் தரமான சுகாதார சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு பணியாற்றியது. சமுதாயத்தின் அனைத்து பிரிவினர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலனை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது,” என்று கூறினார்.
நாட்டில் உள்ள குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களிடையே நிலவும் ஊட்டச்சத்தின்மையை போக்குவதை ஒரு மக்கள் இயக்கமாக ஊட்டச்சத்து மாதம் மாற்றியுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752590
*****************
(Release ID: 1752656)