பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராணுவத்தில் மல்யுத்த வீரர்கள் தேர்வு: செப்டம்பர் 27 முதல் 30 வரை நடக்கிறது

இடுகை இடப்பட்ட நாள்: 06 SEP 2021 12:05PM by PIB Chennai

கர்நாடகா பெல்காம் மாவட்டத்தில் உள்ள மராத்தா காலாட்படைப்பிரிவு மையத்தின் பாய்ஸ் ஸ்போர்ட்ஸ் கம்பெனி, மல்யுத்த வீரர்களுக்கான தேர்வை, தனது மையத்தில் 2021 செப்டம்பர் 27ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடத்துகிறது.

இதில் மைசூரு, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்கலாம். காலை 7 மணி முதல் 10 மணி வரை தேர்வு நடைபெறும். இந்த தேர்வை இந்திய விளையாட்டு ஆணையம், விளையாட்டுத்துறை மருத்துவ மையம் மற்றும் பாய்ஸ் கம்பெனியின் பணியாளர்கள் வெளிப்படையான முறையில் நடத்துவர்.

இதற்கான தகுதி விவரங்களை கீழ்கண்ட இணைப்பில் பார்க்கவும்.

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752482

*****************


(வெளியீட்டு அடையாள எண்: 1752570) வருகையாளர் எண்ணிக்கை : 352
இந்த வெளியீட்டை படிக்க: Bengali , English , Urdu , हिन्दी , Marathi , Telugu