இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

இந்திய விளையாட்டுக்களின் எதிர்காலம் பயிற்சியாளர்களின் கையில் உள்ளது: மத்திய அமைச்சர்- திரு அனுராக் சிங் தாகூர்

Posted On: 05 SEP 2021 4:46PM by PIB Chennai

இந்திய விளையாட்டுக்களின் எதிர்காலம் பயிற்சியாளர்களின் கையில் உள்ளது என மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர்  கூறியுள்ளார்.

பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டுகள் ஆணையத்தின் நேதாஜி சுபாஷ் மையத்தில், விளையாட்டு பயிற்சியில் டிப்ளமோ படிக்கும் 58வது பிரிவினரின் ஆசிரியர் தின விழா கொண்டாட்டம் இன்று நடைப்பெற்றதுஇதில் மத்திய அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் பங்கேற்றார்இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமை இயக்குனர் திரு சந்தீப் பிரதான்மண்டல இயக்குனர் திருமதி ரிது பதிக் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விளையாட்டுத் துறையில் மத்திய அரசு புதிய கவனம் செலுத்துவதை வலியுறுத்திய மத்திய அமைச்சர்  திரு அனுராக் சிங் தாகூர் பேசுகையில், ‘‘இந்திய விளையாட்டுக்களின் எதிர்காலம், பயிற்சியாளர்களின் கையில் உள்ளது, ஆசிரியர்கள் தினத்தில், விளையாட்டு வீரர்களை சிறப்பான பயிற்சிகளுடன் வளர்க்கவும் மற்றும் மேம்படுத்தவும் நாம் தீர்மானிக்க வேண்டும் மற்றும்  முன்னணி விளையாட்டு வீரர்களை, ஒலிம்பிக் தரத்துக்கு கொண்டு வரவும் உறுதி ஏற்க வேண்டும்’’ என்றார்.

இந்திய விளையாட்டுகள் ஆணையத்தின், பெங்களூர் மையத்தில் தற்போது 160 வீரர்கள் தீவிர பயிற்சி பெறுகின்றனர். அதோடு, 168 பயிற்சியாளர்கள், 9 விளையாட்டு பிரிவுகளில்  டிப்ளமோ படிப்பு படிக்கின்றனர்

இந்நிகழ்ச்சிக்கு முன்பாக, பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் நிர்வாக பிரிவு வளாகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு, மத்திய அமைச்சர் திரு அனுராக் தாகூர் மாலை அணிவித்தார்இளம் விளையாட்டு வீரர்களுடன் கலந்துரையாடிய திரு அனுராக் தாகூர், உலகளவிலான போட்டிகளில், சிறந்த செயல்திறனை வெளிப்படுத்த தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என ஊக்குவித்தார்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1752325

 

----(Release ID: 1752359) Visitor Counter : 237