தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சி-டாட் நிறுவனத்தின் 38-வது நிறுவன தின கொண்டாட்டம்

Posted On: 04 SEP 2021 10:40AM by PIB Chennai

தகவல் தொடர்பு அமைச்சகத்தின் தொலைத்தொடர்புத் துறையின் கீழ் இயங்கும்   தொலைத்தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டெலிமேட்டிக்ஸ் மேம்பாட்டு மையம் (சி-டாட்) நேற்று தனது 38-ஆவது நிறுவன தினத்தைக் கொண்டாடியது.

இதனை முன்னிட்டு, தொலைத்தொடர்பு மற்றும் தகவல் மற்றும் தொலைதொடர்புத் துறையில் வளர்ந்து வரும் புதிய பரிணாமங்கள் சம்பந்தமான கருப்பொருள்களில் சி-டாட் நிறுவனம் தொழில்நுட்ப பயிலரங்குகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்தியது. பெருந்தொற்றின் காரணமாக ஜிபி மீமாம்சி சொற்பொழிவு தொடர் 2021 இன் ஒரு பகுதியாக, சர்வதேச தொழில்நுட்ப மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்கள், தொலைத்தொடர்பு துறையைச் சேர்ந்த மூத்த பிரதிநிதிகள், உலகம் முழுவதிலும் உள்ள கல்வியாளர்கள் போன்றோர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டு எதிர்கால தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்கள் குறித்த தங்களது அனுபவங்கள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மின்னணு தகவல் தொடர்பு ஆணையத்தின் தலைவரும் தொலைத்தொடர்பு செயலாளருமான திரு அன்ஷூ பிரகாஷ் இந்த தொழில்நுட்ப மாநாட்டைத் துவக்கி வைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751929

*****************


(Release ID: 1752045) Visitor Counter : 294