பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஊட்டச்சத்து திட்டம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகள் திங்களன்று மும்பையில் நடைபெறவுள்ளன
Posted On:
04 SEP 2021 4:05PM by PIB Chennai
மும்பையின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாயத்தின் பல்வேறு பிரிவுகளுக்கு இடையே 2021 செப்டம்பர் 6 அன்று ஊட்டச்சத்து மாதத்தின் கீழ் ஊட்டச்சத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சகம் மற்றும் மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சகம் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சிகளில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர் திருமதி ஸ்மிரிதி சுபின் இரானி மற்றும் மத்திய சிறுபான்மையினர் நலன் அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கிறிஸ்துவ, புத்த, இஸ்லாமிய, பார்சி, சமண மற்றும் சீக்கிய சமுதாயங்களை சேர்ந்த மற்றும் ஏழைகள் வசிக்கும் மற்றும் பின்தங்கிய பகுதிகளை சேர்ந்த பெண்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் ஊட்டச்சத்து திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.
ஊட்டச்சத்தின் பலன்கள் குறித்து அவர்களுக்கு எடுத்துரைக்கப்படுவதோடு, ஊட்டச்சத்து பெட்டகங்களும் அவர்களுக்கு வழங்கப்படும்.
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு முன்னதாக தாராவியில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தை பார்வையிட உள்ள மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அமைச்சர், பயனாளிகள் மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் உரையாட உள்ளார். இத்திட்டத்தின் பயனாளிகளின் இல்லங்களுக்கும் அவர் செல்லவுள்ளார்.
2019 ஊட்டச்சத்து மாதத்தின் போது இந்தியா முழுவதும் 3.66 கோடி நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், 2020 ஊட்டச்சத்து மாதத்தின் போது 12.84 லட்சம் மரம் நடும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொது இடங்களில் மாபெரும் மரம் நடும் நிகழ்வு மற்றும் ஊட்டச்சத்து தோட்டங்களை உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751995
*****************
(Release ID: 1752037)
Visitor Counter : 278