நிதி அமைச்சகம்

நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குழுவின் இருபத்தி நான்காவது கூட்டத்திற்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்

Posted On: 03 SEP 2021 6:45PM by PIB Chennai

இன்று நடைபெற்ற நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குழுவின் இருபத்தி நான்காவது கூட்டத்திற்கு மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.

நிதி நிலைத்தன்மை, நிதித்துறை வளர்ச்சி, ஒழுங்குமுறை ஒருங்கிணைப்பு, நிதி எழுத்தறிவு, நிதி உள்ளடக்கம் மற்றும் மிகப் பெரிய நிறுவனங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பொருளாதாரத்தின் மீதான சிறப்பு பெரு கண்காணிப்பு உள்ளிட்ட நிதி நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சி குழுவின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அனைத்து நிதி நிலைகளையும் அரசு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அழுத்தத்தில் உள்ள சொத்துக்கள், நிதி நிலைத்தன்மை ஆய்வுக்கான அமைப்பு சார்ந்த செயல்முறையை வலுப்படுத்துதல்,

நிதி உள்ளடக்கம், நிதி நிறுவனங்களுக்கான கட்டமைப்பு மற்றும் வங்கிகள் சார்ந்த விஷயங்கள், அரசு தரவுகள் இந்திய ரூபாயை சர்வதேசமயமாக்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது

 மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751787

*****************



(Release ID: 1751858) Visitor Counter : 246