அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கு தேவையான உள்ளூர் அளவிலான நடவடிக்கைகள் குறித்து நிபுணர்கள் ஆலோசனை
Posted On:
03 SEP 2021 4:18PM by PIB Chennai
பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு இந்தியாவில் உள்ள அனைத்து 612 மாவட்டங்களுக்கும் இருந்தாலும், பெரும்பாலும் நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள 100 மாவட்டங்கள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பு அதிகம் என்று ஐஐஎஸ்சி, பெங்களூரு, ஐஐடி மண்டி மற்றும் ஐஐடி கவுகாத்தி ஆகியவை இணைந்து நடத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஆதரவு பெற்ற ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிழக்கு இந்தியாவில் இருக்கும் ஜார்கண்ட், மிசோராம், ஒடிசா, சத்திஸ்கர், அசாம், பிகார், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று, கொள்கை ஒருங்கிணைப்பு & திட்ட மேலாண்மை பிரிவின் மூத்த ஆலோசகர் மற்றும் தலைவரும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் பருவநிலை மாற்ற நிபுணருமான டாக்டர் அகிலேஷ் குப்தா கூறினார்.
சிஏபி-ஆர்ஈஎஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை-இந்திய அரசு திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பருவநிலை எதிர்ப்பு திட்டத்தை உள்ளூர்மயமாக்கல்: 2050 மற்றும் 2100-ம் ஆண்டுகளுக்கான லட்சியம்’ எனும் இரண்டு நாள் கொள்கை சார்ந்த கூட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டிலுள்ள 100 மிகவும் பாதிக்கப்படக்கூடிய மாவட்டங்களில், அசாம், பிகார், ஜார்கண்ட், உத்தரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய ஐந்து கிழக்கிந்திய மாநிலங்களில் 70 சதவீதம் உள்ளன,” என்றார்.
அடுத்த இரண்டு தசாப்தங்கள் மிகவும் முக்கியம் என்றும், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் முக்கிய கருவியாக விளங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச தட்பவெப்பத்தில் இரண்டு சதவீதம் அதிகரிப்பு என்பது எதிர்ப்பார்ப்பதை விட முன்னதாகவே நிகழக்கூடும் என்றும், இதன் காரணமாக இந்தியாவின் வேளாண்மை, சுகாதாரம் மற்றும் நீர் பாதுகாப்பு துறைகளில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்படலாம் என்றும், இந்த சவாலை திறம்பட எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இந்தியா இருக்கிறதென்றும் அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751720
*****************
(Release ID: 1751808)