சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
பொருளாதார நடவடிக்கையை அதிகரிக்க, நல்ல மேம்பட்ட உள்கட்டமைப்பு முக்கியம்: அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தல்
Posted On:
02 SEP 2021 4:05PM by PIB Chennai
அரசின் வருவாய் தளத்தை மேம்படுத்தி, பொருளாதார நடவடிக்கையை அதிகரிப்பதில், நன்கு மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பின் முக்கியத்துவத்தை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி வலியுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க வர்த்தக சபையின் 29வது ஆண்டு பொது கூட்டத்தில், ‘உலகளாவிய விநியோக சங்கிலியில், உள்கட்டமைப்பால் இயங்கும் இந்தியா’ என்ற தலைப்பில் காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மத்திய அமைச்சர் திரு நிதின் கட்கரி பேசியதாவது:
இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் கடந்த 2 தசாப்தங்களில், 16 பில்லியின் அமெரிக்க டாலரிலிருந்து, 149 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. 2025ம் ஆண்டுக்குள், இது 500 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே தொழில்நுட்ப பரிமாற்றம், புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேலும் அதிகரிப்பது குறித்து ஆராய வேண்டும்.
அடுத்த 5 ஆண்டுகளில், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டும் இந்தியாவின் தொலைநோக்கை நிறைவேற்றுவதற்கு, உள்கட்டமைப்பு மேம்பாடு முக்கிய பங்காற்றுகிறது. தேசிய உள்கட்டமைப்பு திட்டம் மூலம் 1.4 டிரில்லியன் அமெரிக்க டாலரை, மத்திய அரசு முதலீடு செய்கிறது. நாட்டில் முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.100 லட்சம் கோடிக்கு மேற்பட்ட மதிப்பில் மேற்கொள்ளப்படும் பிரதமரின் ஆற்றல் (‘கதிசக்தி) திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளது.
மின்சார வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக இந்தியா மாறிவருகிறது. மின்சார வாகனங்களின் பேட்டரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மறுசீரமைப்பு தொழில்நுறைகளில் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து செயல்பட முடியும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு நிதின்கட்கரி பேசினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751401
*****************
(Release ID: 1751471)
Visitor Counter : 255