எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஹிமாச்சலப் பிரதேசம் பைரா சியுல் நீர் மின் நிலைய புதுப்பிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணியை முடித்தது என்எச்பிசி

प्रविष्टि तिथि: 02 SEP 2021 3:57PM by PIB Chennai

ஹிமாச்சலப் பிரதேசத்தின் சம்பா பகுதியில், 180 மெகா வாட் திறனுள்ள பைரா சியுல் மின் நிலையத்தின் புதுப்பிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணியை தேசிய நீர்மின்சக்தி நிறுவனம் (என்எச்பிசி) நிறைவு செய்து, வர்த்தக செயல்பாடுகளை தொடங்கியது.

பைரா சியுல் மின் நிலையம், என்எச்பிசி-ன் முதல் மின் நிலையம். இது கடந்த 1982ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி மின் உற்பத்தியை தொடங்கி, 35 ஆண்டு காலத்தை நிறைவு செய்தது.  இங்குள்ள 3 நிலையங்களிலும் புதுப்பிப்பு மற்றும் நவீனமயமாக்கல் பணி வெற்றிகரமாக முடிந்தது. இதன் 2 மற்றும் 1வது நிலையங்களில் ஏற்கனவே மின் உற்பத்தி தொடங்கிய நிலையில், 3வது நிலையத்தில் கடந்த மாதம் 31ம் தேதி மின் உற்பத்தி தொடங்கியது. தற்போது 3 மின் நிலையங்களும் தலா 60 மெகா வாட் திறன் மின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. இந்த புதுப்பிப்பு மூலம் பைரா சியுல் மின் நிலையத்தின் ஆயுள், மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

*****************


(रिलीज़ आईडी: 1751451) आगंतुक पटल : 268
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Punjabi