எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின்(என்எம்டிசி) ஆகஸ்ட் மாத செயல்பாட்டில் சாதனை

Posted On: 02 SEP 2021 3:11PM by PIB Chennai

தேசிய கனிம வளர்ச்சி நிறுவனத்தின்(என்எம்டிசி) சிறப்பான செயல்பாடு தொடர்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3.06 மில்லியன் டன்கள் இரும்புத் தாதுவை உற்பத்தி செய்து, 2.91 மில்லியன் டன்கள் இரும்புத் தாதுவை என்எம்டிசி விற்பனை செய்துள்ளது.  இதற்கு முந்தைய மாதங்களைப் போல், ஆகஸ்ட் மாத உற்பத்தி செயல்பாடும், என்எம்டிசி நிறுவன வரலாற்றில் கடந்த 6 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு சிறந்த உற்பத்தியை பதிவு செய்துள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு ஆகஸ்ட் மாத உற்பத்தி 89 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது.  ஆகஸ்ட் மாத விற்பனையும், கடந்தாண்டு இதே கால அளவைவிட 63 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த நிதியாண்டில் ஆகஸ்ட் மாதம் வரையிலான உற்பத்தி மற்றும் விற்பனை, கடந்தாண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் முறையே 44 சதவீதம் மற்றும் 45 சதவீதம் அதிகரித்துள்ளது.

எதிர்பார்ப்புகளை மீண்டும் ஒரு முறை மிஞ்சியதற்காக, என்எம்டிசி குழுவுக்கு, வாழ்த்து தெரிவித்துள்ள அதன் தலைமை நிர்வாக இயக்குனர் திரு சுமித் தேவ் கூறுகையில், ‘‘நடப்பு நிதியாண்டின் முதல் 5 மாதத்தில், எங்களின் செயல்பாடு மிகவும் ஊக்குவிப்பதாக உள்ளது.  இது இந்த நிதியாண்டில் எங்கள் திட்டங்களை நம்பிக்கையுடன் தொடர்வதில், எங்களை வலுவான நிலையில் வைத்துள்ளது.  2022-ம் நிதியாண்டுக்கான எஞ்சிய இலக்குகளை அடைய, கவனம் செலுத்துவதற்கு ஒவ்வொரு ஊழியரின் முயற்சிகளையும் பாராட்டுகிறேன்.’’ என கூறியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751384

*****************



(Release ID: 1751424) Visitor Counter : 168