ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ராஜேந்திர நகர்- புதுதில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் தரம் உயர்த்தப்பட்ட தேஜஸ் படுக்கை வசதி பெட்டிகள் அறிமுகம்

Posted On: 01 SEP 2021 5:48PM by PIB Chennai

ராஜ்தானி ரயில்களில் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட தேஜஸ் படுக்கை வசதி பெட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளதன்‌ மூலம் ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட பயண வசதியை இந்திய ரயில்வே ஏற்படுத்தித் தந்துள்ளது. கிழக்கு மத்திய ரயில்வேயின் மதிப்புமிக்க ராஜேந்திர நகர் (பாட்னா)- புதுதில்லி ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த சீர்மிகு வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புதிய பெட்டி இன்று (செப்டம்பர் 1, 2021) தனது முதல் பயணத்தை மேற்கொண்டது.

ராஜேந்திர நகர்- புது தில்லி ராஜேந்திர நகர் ராஜ்தானி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயிலின் (ரயில் எண் 02309/10) தற்போது உள்ள பெட்டிகள், புத்தம் புதிய தேஜஸ் ரக படுக்கை வகுப்பு பெட்டிகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன. புதிய ரயில்களில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பல்வேறு சிறப்பு வசதிகள் இடம் பெற்றிருக்கும்.

அறிவார்ந்த உணரி அடிப்படையிலான அமைப்பு முறைகளின் உதவியுடன் உலகத்தர வசதிகளை பயணிகளுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பயணிகள் அறிவிப்பு/ தகவல் தெரிவிப்பு அமைப்பு முறை, சிசிடிவி கேமராக்கள் மூலம் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு, தானியங்கி கதவுகள், மருத்துவ அல்லது பாதுகாப்பு அவசர காலத்தின்போது தகவல் தெரிவிக்கும் வசதி, மேம்பட்ட கழிவறை உட்பட ஏராளமான வசதிகள் இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1751117

 

-----


(Release ID: 1751197) Visitor Counter : 224


Read this release in: English , Urdu , Hindi , Punjabi