பாதுகாப்பு அமைச்சகம்
சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக, வங்கதேசத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இந்தியக் கடற்படைக் கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி கிளம்பியது
प्रविष्टि तिथि:
31 AUG 2021 5:33PM by PIB Chennai
சாகர் இயக்கத்தின் ஒரு பகுதியாக, வங்கதேசத்திற்கு மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்காக இந்தியக் கடற்படையின் ரோந்துக் கப்பல் ஐஎன்எஸ் சாவித்ரி விசாகப்பட்டிணத்தில் இருந்து 2021 ஆகஸ்ட் 30 அன்று கிளம்பியது.
இரண்டு 960 எல்பிஎம் மருத்துவ ஆக்சிஜன் ஆலைகளைக் கொண்டு செல்லும் இந்தக் கப்பல் செப்டம்பர் 2 அன்று சிட்டகாங்கைச் சென்றைடையும். இந்த ஆலைகள் வங்கதேசக் கடற்படை மற்றும் தாகா மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்படும்.
உள்நாட்டிலேயே கட்டமைக்கப்பட்ட ரோந்துக் கப்பலான ஐஎன்எஸ் சாவித்ரி, விசாகப்பட்டினத்தில் உள்ள கிழக்குக் கடற்கரைப் பிரிவின் கீழ் செயல்படுகிறது.
இந்திய அரசின் சாகர் (பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) இலட்சியத்தின் கீழ், பிராந்தியத்தில் உள்ள நாடுகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கும் இந்தியக் கடற்படை, தெற்கு/தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட இந்தியப் பெருங்கடலின் ஒட்டுமொத்தப் பகுதியிலும் பல்வேறு மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
100 டன்கள் திரவ மருத்துவ ஆக்சிஜனை இலங்கைக்கு இந்தியக் கடற்படைக் கப்பல் சக்தி எடுத்து சென்ற நிலையில், இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் தாய்லாந்திற்கு மருத்துவப் பொருள்களை ஐஎன்எஸ் ஐராவத் எடுத்து சென்றுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750785
----
(रिलीज़ आईडी: 1750938)
आगंतुक पटल : 234