சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலின் 227-வது நாள்: 64 கோடி பேருக்கு இது வரை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு, முக்கிய மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது

Posted On: 30 AUG 2021 7:57PM by PIB Chennai

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 64 கோடி பேருக்கு (63,99,01,822) கொவிட்-19 தடுப்பூசிகளை நாடு இது வரை செலுத்தி முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.

இன்றிரவு 7 மணி அளவில் வெளியான தற்காலிக அறிக்கையின் படி, 53 லட்சத்திற்கும் அதிகமான (53,37,042) தடுப்பூசி டோஸ்கள் இன்று வழங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்திற்கான இறுதி அறிக்கைகள் இன்று பின்னரவில் நிறைவு செய்யப்படும்.

இதுவரை ஒட்டுமொத்தமாக சுகாதார பணியாளர்களில் 10357664 பேருக்கு முதல் டோசும், 8369624 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 18320807 பேருக்கு முதல் டோசும், 13136776 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 247136975 பேருக்கு முதல் டோசும், 27224648 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில் 130107674 பேருக்கு முதல் டோசும், 53983180 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 86576489 பேருக்கு முதல் டோசும், 44687985 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 492499609 முதல் டோசுகளும் 147402213 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன.

இன்று மட்டும் (2021 ஆகஸ்ட் 30), சுகாதார பணியாளர்களில் 202 பேருக்கு முதல் டோசும், 13478 பேருக்கு இரண்டாவது டோசும், முன்கள பணியாளர்களில் 1290 பேருக்கு முதல் டோசும், 51181 பேருக்கு இரண்டாவது டோசும், 18-44 வயதுப் பிரிவினரில் 2861405 பேருக்கு முதல் டோசும், 679966 பேருக்கு இரண்டாவது டோசும், 45-59 வயதுப் பிரிவினரில்  692692 பேருக்கு முதல் டோசும், 491039 பேருக்கு இரண்டாவது டோசும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 299998 பேருக்கு முதல் டோசும், 245791 பேருக்கு இரண்டாவது டோசும் என மொத்தம் 3855587 முதல் டோசுகளும் 1481455 இரண்டாவது டோசுகளும் வழங்கப்பட்டுள்ளன

கொவிட்-19 இடமிருந்து மக்களை காப்பாற்றக்கூடிய கருவியாக தடுப்புமருந்து வழங்கல் இருப்பதால், உயர்மட்ட அளவில் அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750544

-----


(Release ID: 1750579) Visitor Counter : 233