பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய மாநாட்டிற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தலைமை வகிக்கவுள்ளார்

Posted On: 30 AUG 2021 7:25PM by PIB Chennai

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தேசிய மாநாட்டிற்கு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி தலைமை வகிக்கவுள்ளார். மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு இணை அமைச்சர் டாக்டர் மகேந்திரபாய் முஞ்சபாரா, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அமைச்சர்கள், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக நலத் துறையின் கூடுதல் தலைமை செயலாளர்கள்/ முதன்மை செயலாளர்கள் ஆகியோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒற்றுமையின் சிலை இருக்கும் குஜராத் மாநிலத்தின் கேவாடியாவில் 2021 ஆகஸ்ட் 31 அன்று இந்த முக்கிய மாநாடு தொடங்க உள்ளது. ஒரே இந்தியா ஒப்பற்ற இந்தியா என்பதை பிரதிபலிக்கும் விதமாக ஒவ்வொரு மாநிலத்தின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்கள் ஊட்டச்சத்து மிக்க மரக்கன்றுகளை நடுவார்கள்.

ஊட்டச்சத்து மிக்க மரக்கன்றுகள் மற்றும் ஊட்டச்சத்து தோட்டங்கள் நாடு முழுவதும் உருவாவதை இது ஊக்குவிக்கும்.

நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கான தனது லட்சியத்தை பகிர்ந்துகொள்ளும் விதமாக மாநாட்டின் போது திருமதி ஸ்மிருதி சுபின் இரானி சிறப்புரை ஆற்றுவார். இணை அமைச்சர் டாக்டர் மகேந்திரபாய் முஞ்சபாராவும் உரையாற்றுவார்.

இம்மாநாட்டின் போது மூன்று திட்டங்களில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றின் எதிர்பார்ப்புகள் மீது கவனம் செலுத்தப்படும். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் ஒவ்வொரு விளக்க காட்சிக்கு பின்னரும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் பின்னூட்ட உரையாடல் நிகழ்ச்சி நடைபெறும்.

மேலும், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர்கள் முக்கிய பிரச்சினைகள் குறித்த தங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்த சர்வதேச குறியீடுகள் மீதான விளக்க காட்சியும் காண்பிக்கப்படும்.

உண்மையான கூட்டாட்சி தத்துவத்தின் உணர்வை வெளிப்படுத்தும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடனான இந்த மாநாடு, நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் ஒன்றுபட்ட முயற்சிகளுக்கு வழிவகுக்கும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750528

 

---



(Release ID: 1750570) Visitor Counter : 217