சுரங்கங்கள் அமைச்சகம்

இந்திய புவியியல் ஆய்வு பயிற்சி மையம், தனது 24 மணி நேர பிரத்தியேக இணையதளத்தை தொடங்கியது

Posted On: 30 AUG 2021 7:05PM by PIB Chennai

சுரங்கத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும், ஐதராபாத்தில் உள்ள புவியியல் ஆய்வு பயிற்சி மையம்(GSITI), புவி அறிவியல் பற்றிய பல ஆன்லைன் பயிற்சி திட்டங்களை வழங்க, 24 மணி நேரமும் செயல்படும் இணையதளத்தை https://training.gsiti.gsi.gov.in/) தொடங்கியுள்ளது.   மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்துக்கு ஏற்ற வகையில் இது உள்ளது.

இந்த இணையதளத்தின் பீட்டா வகை, புவி அறிவியல் பற்றிய பயிற்சியை அளிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் பதிவு செய்யப்பட்ட 33 பயிற்சி திட்டங்கள்  (164 வீடியோ உரைகள்) உள்ளன. பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன

மேலும், ஜிஎஸ்ஐடிஐ-யின் அன்றாட செயல்பாடுகள், புதிய பயிற்சி அறிவிப்புகள், ஆன்லைன் பயிற்சிகளில் பங்கு பெறுபவர்களின் பட்டியல் தொடர்ந்து இந்த இணையதளம் மூலம் வெளியிடப்படுகின்றன.

இந்த இணையளத்தில் 12,380க்கும் மேற்பட்டோர் ஏற்கனவே பதிவு செய்து, இந்த பயிற்சி மையம் வழங்கும் தொழில்நுட்ப பயிற்சிகளை பெற்று பயனடைந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750519

-----

 

 



(Release ID: 1750560) Visitor Counter : 273


Read this release in: English , Urdu , Hindi , Bengali