புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம், விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தை கொண்டாடுகிறது

Posted On: 30 AUG 2021 3:04PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் 75வது ஆண்டை, அம்ரித் மகோத்ஸவமாக மத்திய அரசு கொண்டாடி வருகிறது. இதை முன்னிட்டு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் மக்கள் மைய கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை 2021 ஆகஸ்ட் 23ம் தேதி முதல் 27ம் தேதி வரை நடத்தியது

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக திட்டங்களின் பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் அனுபவங்களையும், கருத்துக்களையும் தெரிவித்தனர். மாநில முகமைகளின் ஒத்துழைப்புடன் பல நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

மின் தொகுப்பு அற்ற மற்றும் சூரிய மின்சக்தி பயன்பாடு பரவலாக்க திட்டம் குறித்த அமர்வுகள் கடந்த 25ம் தேதி நடத்தப்பட்டனகாலையில் நடந்த அமர்வில், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் இயக்குனர் திரு ஜே.கே. ஜெதானி, சோன்பத்ரா மாவட்டத்தின் ராஜ்கீயா பாலிகா கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடினார். அந்த மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட சூரிய மின்சக்தி விளக்குகள், மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் படிப்பதற்கு உதவியாக இருந்தன என மாணவர்கள் தெரிவித்தனர். சூரிய மின்சக்தி மற்றும் அதன் பயன்கள் குறித்து அறிய, இது மாணவர்களுக்கு உதவியது.

அதைத் தொடர்ந்து, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரிகள், உள்ளூர் பயனாளிகளுடன் கலந்துரையாடினர். அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த பயனாளிகள் சூரிய மின்சக்தி தெரு விளக்குகள் குறித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்ட கனிஹாமா கிராம பயனாளிகள் கூறுகையில், ‘‘சூரிய மின்சக்தி தெருவிளக்குகள் பொருத்தப்பட்டது தங்கள் வாழ்க்கையை மாற்றியதாகவும், இரவு நேரத்தில் தெருக்களில் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிகிறது எனவும் தெரிவித்தனர். சூரிய மின்சக்தி தெரு விளக்குகள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை மேம்படுத்தியுள்ளதாக அசாம் பொங்கைகான் நகராட்சி பயனாளிகள் தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750409

-----


(Release ID: 1750450) Visitor Counter : 408