சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு 63.09 கோடிக்கும் மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டன
प्रविष्टि तिथि:
30 AUG 2021 10:36AM by PIB Chennai
கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை நாடு முழுவதும் விரைவு படுத்தவும் மற்றும் விரிவு படுத்தவும் மத்திய அரசு உறுதியாக உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி போடும் திட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது. தடுப்பூசிகள் கிடைக்கும் நிலவரம் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்படுகின்றன. இதனால் தடுப்பூசி விநியோகத்தை மாநிலங்களால் சிறப்பாக திட்டமிட முடிகிறது.
நாட்டில் தடுப்பூசி நிறுவனங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளில், 75 சதவீதத்தை மத்திய அரச கொள்முதல் செய்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்குகிறது.
63.09 கோடிக்கும் மேற்பட்ட (63,09,30,270) தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்கியுள்ளது. மேலும், 21.76 (21,76,930) லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள், வழங்கப்படவுள்ளன.
4.87 கோடிக்கும் மேற்பட்ட (4,87,39,946) கொவிட் தடுப்பூசி டோஸ்கள் மாநிலங்கள் / யூனியன் பிரசேதங்களிடம் இருப்பில் உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750323
*****
(रिलीज़ आईडी: 1750396)
आगंतुक पटल : 279
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
हिन्दी
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada