ஆயுஷ்
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: பிரச்சார திட்டங்களை அறிவித்தார் ஆயுஸ் அமைச்சர் சர்பானந்தா சோனோவால்
Posted On:
29 AUG 2021 2:21PM by PIB Chennai
விடுதலையின் அம்ரித் மகோத்ஸவத்தை கொண்டாட, ஆயுஷ் அமைச்சகத்தின் பல நடவடிக்கைகள் மற்றும் பிரச்சாரங்களை மத்திய ஆயுஷ் அமைச்சர் திரு சர்பானந்தா சோனோவால் அறிவித்துள்ளார். இதில் விஞ்ஞான் பவனில் இருந்து தொடங்கப்படும் ‘ஒய் ப்ரேக்’ செயலி, விவசாய நிலங்களில் மூலிகை தாவரங்களை விளைவிக்கும் ஆண்டு முழுவதுமான பிரச்சாரம், வீடுகளுக்கு மூலிகை செடிகள் வழங்குவது, ஆயுஷ் முறைகள் பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உணர்த்துவது ஆகியவை இதில் அடங்கும்.
ஆகஸ்ட் 30ம் தேதி முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை நடத்தப்படும் ஒரு வாரகால செயல்பாடுகள் மற்றும் பிரச்சாரங்கள் நாட்டின் தொலைதூர பகுதிகளை சென்றடைவதையும், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை, விவசாயிகள் முதல் கார்பரேட்டுகள் வரை சென்றடைவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த மத்திய அமைச்சர் திரு சோனோவால் கூறியதாவது:
நாட்டில் அதிக மக்கள் பயனடைய, தனது சேவை விநியோகத்தை அதிகரிக்க, இந்த வாய்ப்பை ஆயுஸ் அமைச்சகம் பயன்படுத்தும். இந்த முயற்சியில் அனைத்து மாநில அரசுகளும் பங்கெடுக்கும் என நம்புகிறேன். 75,000 ஹெக்டேர் நிலத்தில் மூலிகை செடிகளை விளைவிக்கும் பிரச்சாரம், மூலிகைகள் கிடைப்பதை உறுதி செய்யும், விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடைக்கும் ஆதாரமாகவும் இருக்கும். இந்த இலக்கை அடைய, அனைத்து மாநில மூலிகை வாரியங்களும் பங்கெடுக்கும். இது விவசாயிகளுக்கு மிகப் பெரியளவில் பயனளிக்கும்.
இவ்வாறு மத்திய அமைச்சர் திரு சோனோவால் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1750141
*****************
(Release ID: 1750183)
Visitor Counter : 365