மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக இணைய கருத்தரங்கை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் அமைச்சகத்தின் மீன்வளத் துறை நடத்தியது

Posted On: 28 AUG 2021 4:01PM by PIB Chennai

விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் அதன் மேலாண்மையில் முக்கிய நோய்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள்எனும் தலைப்பிலான இணைய கருத்தரங்கை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, மீன்வளம் அமைச்சகத்தின் மீன்வளத் துறை 2021 ஆகஸ்ட் 28 அன்று நடத்தியது.

கருத்தரங்கிற்கு தலைமை வகித்து துவக்கவுரை ஆற்றிய இந்திய அரசின் மீன்வளத் துறை செயலாளர் திரு ஜதீந்திர நாத் ஸ்வைன், சுதந்திரம் அடைந்ததில் இருந்து இத்துறையில் ஏற்பட்டு வரும் புரட்சி மற்றும் வளர்ச்சி குறித்து எடுத்துரைத்தார்.

நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை ஒட்டி இணைய கருத்தரங்குகளை இந்திய அரசின் மீன்வளத் துறை நடத்தி வருவதகாவும், நன்னீர் மீன்வளர்ப்பு மற்றும் அதன் மேலாண்மையில் முக்கிய நோய்கள் ஏற்படுத்தும் பிரச்சினைகள் மீது இன்றைய இணைய கருத்தரங்கு கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

நாட்டின் மீன் உற்பத்தியில் நன்னீர் மீன்வளர்ப்பு ஆற்றி வரும் பங்கையும்  அவர் குறிப்பிட்டார். பிரதமரின் மத்சய சம்பட திட்டம் குறித்து விளக்கிய திரு ஸ்வைன், நன்னீர் மீன்வளர்ப்பு நோய்களின் மேலாண்மைக்கு அதன் உட்கூறு ஆதரவளிப்பதாக கூறினார்.

விவசாயிகள், தொழில்முனைவோர், விஞ்ஞானிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுடனான உரையாடலும் நடைபெற்றது. ஐசிஏஆர்-சிஐஎஃப்ஏ முதன்மை விஞ்ஞானி டாக்டர் பி கே சாஹூ உரையாடலுக்கு தலைமை வகித்தார். பண்ணை அளவிலான நோய்கள் மற்றும் நோய் மேலாண்மையில் அவர்கள் எதிர்கொண்டு வரும் சிக்கல்கள் குறித்த கேள்விகளை உரையாடலில் கலந்து கொண்டவர்கள் எழுப்பினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749895

*****************(Release ID: 1749948) Visitor Counter : 258


Read this release in: English , Urdu , Hindi , Telugu