எஃகுத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விடுதலையின் அம்ரித் மகோத்ஸவம்: எஃகு அமைச்சகத்தின் மீகான் நிறுவனம் கொண்டாடியது

प्रविष्टि तिथि: 27 AUG 2021 3:17PM by PIB Chennai

சுதந்திர இந்தியாவின் வைரவிழாவை கொண்டாட, எஃகு அமைச்சகத்தின் பொதுத்துறை நிறுவனமான மீகான் நிறுவனம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்திய தேசியக் கொடியின் விதிமுறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம், தேசியக் கொடி ஏற்றும்போது செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை  போன்றவற்றை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் தெரிந்து கொள்ளசுதந்திர தினத்துக்கு முன்பாகவே  மீகான் நிறுவனத்தின் தலைமையகத்தின் நுழைவாயில் மற்றும் முக்கிய இடங்களில் அறிவிப்புகள் வைக்கப்பட்டன.

நாட்டுக்காக போராட, சுதந்திரப் போராட்ட வீரர்கள், தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர்.  சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை எடுத்துக்கூறும் படைப்புகள், அலுவலக வளாகத்தின் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டன.

 சுதந்திர தினமும், மீகான் நிறுவனத்தின் அனைத்து அலுவலகங்களிலும் மிகுந்த உற்சாகத்துடன், கொவிட் நெறிமுறைகளை பின்பற்றி  கொண்டாடப்பட்டது.

*****************


(रिलीज़ आईडी: 1749605) आगंतुक पटल : 201
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी