தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் நியூஸ்ஆன்ஏர் செயலியில், வானொலி நேரடி ஒலிபரப்பின் தரவரிசை பட்டியல்

இடுகை இடப்பட்ட நாள்: 27 AUG 2021 12:26PM by PIB Chennai

நியூஸ்ஆன் ஏர் செயலியில் ஒலிபரப்பப்படும் அகில இந்திய வானொலி நேரடி ஒலிபரப்புகள் பிரபலமாக உள்ள இந்திய நகரங்களின் தரவரிசை பட்டியலில், மும்பை, தில்லி தேசிய தலைநகர் மண்டலம், ஜெய்ப்பூர் ஆகிய நகரங்கள் முன்னேறியுள்ளன. சென்னை, அகமதாபாத் ஆகிய நகரங்கள் பின்னுக்கு சென்றுள்ளன.

முக்கிய மாற்றங்களாக, தரவரிசை பட்டியலில் 8வது இடத்துக்கு முன்னேறிய ஏஐஆர் கொடைக்கானல், தற்போது தனது பழைய இடமான 10வது இடத்துக்கு மீண்டும் சென்றுவிட்டது.

அகில இந்திய வானொலியில், 240க்கும் மேற்பட்ட வானொலி சேவைகள் நியூஸ்ஆன்ஏர் செயலில் நேரடியாக ஒலிபரப்பப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் மட்டும் அல்லாமல், உலகம் முழுவதும் 85க்கும் மேற்பட்ட நாடுகளில், 8000 நகரங்களில் அதிகளவிலான நேயர்கள் உள்ளனர்.

நியூஸ்ஆன்ஏர் செயலியில் அகில இந்திய வானொலியின் நேரடி ஒலிபரப்பு  மிக பிரபலமாக உள்ள நகரங்களின் தரவரிசைப் பட்டியலை கீழே உள்ள இணைப்பில் காணலாம்.

 

முன்னணியில் உள்ள ரேடியோ சேனல்களின் தரவரிசை பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த தரவரிசை  பட்டியல் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 15ம் தேதிவரை சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749497


(வெளியீட்டு அடையாள எண்: 1749554) வருகையாளர் எண்ணிக்கை : 239
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu