சுற்றுலா அமைச்சகம்

‘லடாக்: புதிய தொடக்கம், புதிய இலக்குகள்’’ : லே பகுதியில், 3 நாள் சுற்றுலா நிகழ்ச்சி தொடங்கியது

Posted On: 26 AUG 2021 4:44PM by PIB Chennai

லே பகுதியில், ‘‘லடாக்: புதிய தொடக்கம், புதிய இலக்குகள்’’  என்ற தலைப்பில்  3 நாள் சுற்றுலா நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

இதில், லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநர் திரு ராதா கிருஷ்ண மாத்தூர் மற்றும் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி ஆகியோர்  உரையாற்றினார். அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், ‘‘லடாக் பகுதிக்கான, சுற்றுலா தொலைநோக்கு’’ குறித்த ஆவணம் வெளியிடப்பட்டது. இது லடாக் பகுதியின், ஒட்டுமொத்த வளர்ச்சி மீது கவனம் செலுத்தியது. நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகள், உள்ளூர் பொருட்கள்  மற்றும் மனித வளங்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் பின்னணியில் சுற்றுலாவை ஊக்குவிக்க  இந்த ஆவணம் திட்டமிட்டுள்ளது.

இந்திய சுற்றுலாத்துறை அமைச்சகம், லடாக் சுற்றுலாத்துறையுடன் இணைந்து இந்நிகழ்ச்சியை 2021 ஆகஸ்ட் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடத்துகிறதுலடாக் பகுதியில் சுற்றுலாவை ஊக்குவிப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

சுற்றுலாப் பயணிகளுக்கு, லடாக் வழங்க கூடிய குளிர்கால சுற்றுலா, அறிவியல் அடிப்படையிலான சுற்றுலா குறித்து லடாக் துணை நிலை ஆளுநர் திரு ராதா கிருஷ்ண மாத்தூர் பேசினார்.

காணொலி காட்சி மூலம் உரையாற்றிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் திரு ஜி.கிஷன் ரெட்டி, ‘‘லடாக்கில் கடந்த 40 ஆண்டுகளில், மிகப் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளதுஉயர்ந்த கணவாய்கள், இங்கு உள்ளன. இது சுற்றுலா பயணிகளுக்கு இயற்கை அழகின் பேரின்பம் முதல்  மலை ஏறுபவர்கள், மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளில்  பயணம் செய்பவர்களுக்கு சாகச வாய்ப்புகளை அளிக்கும்’’ என்றார்.

சுற்றுலாப் பயணிகளை கவரும்வாட்டர் ஸ்கிரீன் மல்டிமீடியாகாட்சி  உட்பட பல திட்டங்களுக்கு மத்திய அரசு ரூ.23.21 கோடி வழங்கியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1749257

 

----



(Release ID: 1749418) Visitor Counter : 246